உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

199

66

‘அச்சுப் போலே பூப்பூக்கும் அமலே என்னக் காய்காய்க்கும்.” உவமை பற்றி வந்தது என்பார் இளம்பூரணர்.

து,

‘பிறை கவ்வி மலை நடக்கும்' என்றுரைத்து யானையைச் சுட்டுவார் பேராசிரியர்.

“நீராடான், பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின்

ஊராடு நீரிற்காக் கை

என்று பின்னதற்கு எடுத்துக்காட்டும் தருவார் அவர். இது நெருப்பு.

முதுமொழி : நுண்மை - சுருக்கம் - விளக்கம் - எளிமை என்பவை விளங்கக் கருதிய பொருளைத் தருவது முதுமொழியாகும்.

“கன்றுக் குட்டிமேயக் கழுதைக் குட்டியைக் காதறுத்தான் என்பதும் “பழிஓரிடம்; பாவம் ஓரிடம்” என்னும் பழமொழியும் அறிக. மந்திரம் :

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப”

என்பது இதன் இலக்கணம் (1434).

சொல்லிய சொல், வெல்லும் சொல்லாக அமையவல்லார் ஆணை மொழியே மந்திரம் ஆகும். 'தானே' என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரம் என்பதற்கு என்றார் பேராசிரியர். இதற்கு அவர் காட்டும் பாட்டுகளும் விளக்கமும்:

66

எனவும்,

“ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த

காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய

அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சுவா’

“முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி - அரணியல்

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்

ஆனந்தம் சேர்க சுவா’

எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் என்பது.

குறிப்பு : குறிப்பு என்பது எழுத்தொடும் சொல்லொடும் பொருந் தாது,புறத்தால் பொருள் அறியுமாறு பாவால் கூறுவது.பிசிக்கும் இதற்கும் வேறுபாடு அது உரைப்பாட்டாய் வருவது; இது பாவாய் வருவது என்பது.