உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மக்களைச் சுட்டிய அவர் மக்கள் தாமே என்று உறுதிப்படுத்தி யமை புலப்படவில்லையா. பிறரைச் சுட்டவேண்டிக் கூறினார் எனின், அடுத்த அடியைப்

"பிறரும் உளரே அக்கிளைப் பிறப்பர்'

என்றல்லவோ யாத்திருப்பார்? இதன் விளைவு என்ன?

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை

என நன்னூலாரை நூற்பா யாக்க வைத்ததென்க.

'தேவரும் நரகரும்' வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழ்நரா? செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தரா?

காழ் : ஓரறிவு முதலாகக் கூறிய ஆசிரியர் புறக்காழ், அகக்காழ் (வயிரம்), தோடு, இலை, காய் இன்னவற்றைக் கூறவேண்டுமானால் எங்கே கூறுவார்? கூறியிருப்பார்! இவ் வுயிரிகளைத் தொடர்ந்து தானே கூறி யிருப்பார்.

வைப்பு முறை தவறா வன்பிடியராகிய அவர் தம் ‘கட்டமைதி’ அறிந்தார், இவ் விட்டமைதியைத் தெளிவாக அறிவர்.

1532ஆம் நூற்பாவில் இருந்து 1585ஆம் நூற்பா வரை ‘இடைப் பிற வர’ நூல் யாப்பாரா?

அவர் வரன்முறைப்படியே ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் இவற்றை முடித்து, அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், மாந்தர் என்பார் பற்றி 1570 முதல் 1584 வரை கூறுகிறார். பின்னர் ஓரறிவுயிர் பற்றித் தொடர்கிறார். இவை அவர் வைப்பு முறை எனலாமா?

“எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும்” என்பது பழமொழி. இடைச்சேர்ப்பின் உண்மை வெளிப்பாடு இஃதென்க. இதனைப் பற்றி அப் பகுதியில் காணலாம்.

ஆண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும்

ஏறு - பன்றி,புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா. ஏற்றை - எல்லா ஆணுக்கும் பொது.

ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை.

களிறு- வேழம், கேழல்.

சே - எருது.

சேவல் - மயிலலாப் பறவை, குதிரை.

இரலை - புல்வாய்.