உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாசிரியர்

இளம்பூரணர்

உரை

உரையாசிரியர் என்ற அளவானே, 'இளம்பூரணர்' என அறியப் பெறும் பெருமையுடையவர் இவர். தொல்காப்பியத்திற்கு முதற்கண் உரை கண்டவராதலுடன், முதன்மையான உரை கண்டவரும் இவரே. மற்றொரு சிறப்பு இவருரையே நூன் முழுமைக்கும் கிடைத்துள்ளமை. யாசிரியர் புலமை நலத்தையும், பேரருள் பேருள்ளத்தையும், உரையெழுது தற்கே தம் தவவாழ்வைச் செலவிட்ட தமிழ்ப்பற்றையும் எத்துணை விரித்துச் சொல்லினும் குறைவுடையதாகவே அமையும். அத்தகும் உயர்வற உயர்ந்த உயர்வர் இவர்.

"சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருடத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை உதாரணங்களோடு பாடங் கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியம் கற்றவர்கள் அருமை என்பது, அவர் தந்தையார் வேங்கடாசலம் முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையராயின பொழுது பறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிகத் திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருடமிருந்து பாடங்கேட்டு வந்தமையாலும் வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவர் என்பதனாலும் அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்ப முதலியார் என்று பெயர் வந்தமையாலும் பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கணச் சமுச்சயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையாலும் நிச்சயிக்கலாம்." என்பது தொல். பொருள். நச்சினார்க்கினியப் பதிப்பில் (1885) சி. வை. தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள பதிப்புரை. பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் வந்த இப்பதிப்பில் தொல்காப்பியப் பின்னான்கியல் உரைகளே உள. இவை நச்சினார்க்கினியம் அன்று, பேராசிரியம் எனச் செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1; தொகுதி 2 பகுதி 11 ஆகியவற்றிலும், தொல். செய்யுளியல்