உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

ை இளங்குமரனார் தமிழ்வளம் - 19

நச்சினார்க்கினியர் உரையுடன் வெளிவந்த தமிழ்ச் சங்கப் பதிப்பிலும் பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்கார் எழுதினார்.

தொல்காப்பியம் வரதப்பர் வரலாறும், தாமோதரனாரின் நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புக் குறிப்பும் மேல் ஆய்வும் நமக்கு என்ன சொல்கின்றன? இளம்பூரணரும் பிறரும் உரை வரைந்து நூலைப் பொருளுடன் காத்த பின்னரும் அஃதறிஞரும் அறியா நிலையில் இருந்தது என்றால், இளம்பூரணர் உரை வரைதலை மேற்கொள்ளா திருந்திருந்தால் தொல்காப்பியத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும், என்பதே!

தொல்.பொருள். இளம்பூரணத்தை 1920இல் வெளியிட்ட கா. நமச் சிவாய முதலியார் 1924இல் தொல். பொருள். மூலத்தை முதற்கண் வெளியிட் டுள்ளார், உரையொடு கூடிய மூலத்தில் இருந்து தனியே மூலத்தைப் பெயர்த்துப் பதிப்பித்த பதிப்பே மூலப்பதிப்பு என்பதை எண்ணிப் பார்த் தால், நாம் இளம்பூரணர்க்குப் பட்டுள்ள நன்றிக் கடனுக்கு அளவுண்டோ? இவர்தம் உரைச்சுவடி இல்லாக்கால், மற்றையர் உரைவரையும் வாய்ப்பும் ஏற்பட்டிராதே! தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரைகொண்ட நலத்தாலேயே என்பதை எண்ணும் போதே இவர் தொண்டு மலை விளக்கென இலங்குவதாம்.

இளம்பூரணர்

இளம்பூரணர் என்னும் பெயரால், இவர் இளமையிலேயே முழுதறிவு பெற்றுச் சிறந்தமை கண்ட சான்றோர் இச்சிறப்புப் பெயரால் வரை வழங்கினர்” என்பது விளங்கும். இஃதவர் இயற்பெயராக இருத்தற்கு இயலாது. கண்ணகியார் 'சிறுமுதுக்குறைவி' எனப்பட்டதும், நம்மாழ்வார் 'சிறுப்பெரியார்' எனப்பட்டதும் அறிவார் இதனைத் தெளிவார்.

'இளங்கோ வேந்தர்' ‘இளங்கோவடிகளா'ராகப் பெயர் பெற்றமை போல் இளம்பூரணரும் தம் துறவினால் 'இளம்பூரணவடிகளார்' எனப் பட்டார் என்பது விளங்குகின்றது.

இவர் துறவோர் என்பதை நமக்கு வெளிப்படக் கூறுபவர் நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைநாதர். அவர் எச்சங்களின் வகையை எடுத்துக் காட்டுங்கால்(359) இளம்பூரணர் உரையை உரைத்து “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரண ரென்னும் ஏதமில் மாதவர் ஓதியவுரையென் றுணர்க" என்கிறார்.

இதில் இளம்பூரணரை ‘ஏதமில் மாதவர்' என்ற செய்தி, இவர் துறவோர் என்பதைக் காட்டும் புறச்சான்றாம். அகச்சான்று உண்டோ ா எனின் உண்டு என்பது மறுமொழியாம்.