உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

"கைக்கிளை முதலாப் பெருந்திணை

இறுவாய்

213

முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்னும் நூற்பா அகத்திணையின் முதற்கண் உள்ளது. இதில் அகத்திணை ஏழும் முறை பெற நிற்கும் வகையைக் கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரைவிளக்கம் வரையும் இளம்பூரணர், "இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்ட மாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்கிறார்.

‘காமம் நீத்தபால்', ‘கட்டில் நீத்தபால்’, ‘தாபத நிலை', ‘தபுதாரநிலை’, ‘சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன்' எனவரும் இடங்களில் இத்தகு கருத்து உரைக்கப் பெறின் பருந்தும் நிழலுமென நூலாசிரியர் சொல்லொடு பொருள் பொருந்திச் செல்வதாகக் கொள்ள வாய்க்கும். இவ்விடத்தில் அக்குறிப்பு இல்லையாகவும் 'இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு' என்பது இளம்பூரணர் உட்கோளேயாம் என்பதை வெளிப்படுத்தும்.

ரையன்றி இப்பகுதிக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர் நச்சினார்க்கினியரே. அவர் தாமும் இவர்க்குப் பின் உரை கண்டவர். இவரை ஏற்றும் மறுத்தும் உரைப்பவர். அவர் பொருளதிகாரத்தில், “இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப" என்றும், “அறுவகைப் பட்டபார்ப்பனப் பக்கமும் என்னும் சூத்திரத்தான் இல்லறமும் துறவறமும் கூறினார். இந்நிலையானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார்” என்றாரே யன்றிக் காமத்துப் பயனின்மை உய்த்துணரவைத்தாரெனக் கூறினாரல்லர். அவ்வாறு ஆசிரியர் கூறக் கருதியிருந்தால் உய்த்துணர்வில் லாமலே வெளிப்பட விளங்க உரைப்பார் என்பது இளம்பூரணரோ அறியார்? இவர் கொண்டிருந்த துறவுநிலை உந்துதலால் வந்த மொழி ஈதெனக் கொள்ளல் தகும். “இனி மாறுகொளக் கூறல்,” என்பதற்குத் “தவம் நன்று என்றவன் தான்தவம் தீதென்று கூறல்” என்பதும் (பொ.654) குறிப்பாகலாம். இவர் துறவர் என்பது 'இளம்பூரண அடிகள்’ என்னும் அடியார்க்கு நல்லார் குறிப்பாலும் (சிலப். 11 :18-20) புலப்படும்.

மயிலைநாதர் வரைந்த தொடரிலே இளம்பூரணர்க்குரிய தனிப் பெருஞ் சிறப்பொன்றைச் சுட்டுதலறிந்தோம். அஃது, ‘உளங்கூர் கேள்வி’ என்பது. “செவி வாயாக நெஞ்சு களனாகப்” பாடம் கேட்பதும் கேட்ட