உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

215

தாமும் விரித்து ஓதுவாராயின் ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால் முதனூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும் தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்றுணர்க. அஃதேல் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின் காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும் பொருளானே அறஞ் செய்யும் ஆகலானும் இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க,” என்று வரையும் எழுத்தால் தொல்காப்பிய நூலோட்ட நுணுக்கத்தை நுவல்கிறார்.

وو

உழிஞைத் துறையை, “அதுவே தானும் இருநால் வகைத்தே என்னும் ஆசிரியர் (பொ.67) அடுத்த நூற்பாவில் அத்துறைகளைக் கூறி "நாலிரு வகைத்தே" (பொ.68) என்றும் கூறுகிறார். இதனைக் கூறியது கூறல் என எவரும் எண்ணி விடுவரோ என்னும் எண்ணம் "கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை” இளம்பூரணர்க்குத் தோன்றிற்றுப் போலும். அதனால், “பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை” என்றார்.

‘ஆசிரியன் ஓதினான்' என்பது போலக் கூறுதலே பண்டை உரை யாசிரியர் மரபு (எழுத்.469). “குறிப்பு என்றார்”, “கூறினார்” (பொருள்.104) என இளம்பூரணத்துள் வருதல் பதிப்பாசிரியர் கருத்துப்போலும்!

ன்

மிகைபடக் கூறல் என்னும் நூற்குற்றம் விளக்கும் இளம்பூரணர், மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிறபொருளும் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவான் எடுத்துக்கொண்டான் வடமொழி இலக்கணமும் கூறல்” என்கிறார். இக்குற்றம் செய்யாத சீருரை யாளர் செந்தமிழ் இளம்பூரணர். இக்குற்றம் செய்தார், 'இவர் வடமொழி யறியார்' என்பர். எழுத்து. 42, 45, 75, சொல். 443, பொருள். 30, 151, 656 ஆகிய நூற்பாக்களின் உரைகளைக் காண்போர் இவர் வடமொழி அறியார் எனக் கருதார்.

இளம்பூரணர் சமணர் என்றும் சைவர் என்றும் கூறுவாருளர்.

படிமையோன் என்பதற்குத் 'தவவொழுக்கத்தையுடையோன்' என உரைவரைந்ததையும் (பாயிரம்) படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதையும் குறித்துச் சமணர் என்பர். படிமை என்பது கட்டமை ஒழுக்கத்தைச் சுட்டுவது என்பதைப் பதிற்றுப்பத்துள் கண்டு கொள்க (74). படிவம் என்பதும் அப்பாடல் ஆட்சியில் உண்டு என்பதும் அறிக.

66

னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது” (எழுத்.1) என்று இவர் எழுதுவது கொண்டு சமணர்