உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

என்பர். முற்பட வைக்கப்பட்ட அகரத்தின் சிறப்புக் கூறியவர் பிற்பட வைக்கப்பட்ட னகரத்தின் சிறப்புக் கூறுவாராய் இது கூறினர். முற்படக் கூறலும் சிறப்பே; பிற்படக் கூறலும் சிறப்பே என்பது நூன்முறை. அம்முறைக்கேற்ப னகரச் சிறப்பாகக் கூற இதனைக் கூறினாரேயன்றி ‘மகளிர் வீடு பேறு எய்தார்’ என்னும் குறிப்பு அதில் இல்லை எனக் கொள்க.

இனிச் சமணர் அல்லர் என்பதற்கு, “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்" எனவரும் தொல்காப்பிய (பொ.635) நூற்பாவில் விசும்பும் ஒரு பூதமெனக் கொண்டதைக் காட்டுவர். நூற்பாவிற் கிடந்தாங்கு உரை விரிக்கும் மரபுடைய இளம்பூரணரை அதனைக் காட்டி ஒரு சார்பிற் கூட்டல் சாலாது.

66

66

குமர கோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக் கோட்டம்” என்பவர் ‘அருக கோட்டம் அருகக் கோட்டம்” எனக் காட்டாமையால் சமணச் சார்பினர் அல்லர் என்பர். காட்டாமையால் அச்சார்பினர் அல்லர் என்பது ஏற்காமை போல காட்டியமையால் அச் சார்பினர் என்பதும் ஆகாதாம். எடுத்துக்கொண்ட பொருளுக்கு எடுத்துக்காட்டுப் பொருந்துவதா என்பதே உரை நோக்கு.

குமரகோட்டம் காட்டியதற்கு முற்றொடரிலேயே ‘ஆசீவகப்பள்ளி' என்பதைக் காட்டுகிறாரே; அவர் அருகக் கோட்டம் காட்டாமையால் ம் சமணர் அல்லர் என்று கொண்டால், ஆசீவகப் பள்ளியை முற்படக் காட்டல் கொண்டு சமணர் எனக் கொள்ள வேண்டுமன்றோ! ஆகலின் பொருளில் என்க.

இனி, ‘இளம்பூரணர்’ என்பது முருகன் பெயர்களுள் ஒன்றாகலின் சைவர் என்பர். 'இளையாய்' என்பதிலும் 'இளம்' என்பதிலும் கண்ட சொல்லொப்புமையன்றிப் பொருளொப்புமை காட்ட முடியாக் குறிப்பு ஈதெனல் தெளிவு.

66

ஆறு சூடி நீறு பூசி

ஏறும் ஏறும் இறைவனைக்

கூறு நெஞ்சே குறையிலை நினக்கே

என்பதை இவர் திருவுள்ளத் தூறிய பெரும் பொருட் சிறுபாடல் எனக் கூறிச் சைவராக்கினால், அடுத்தாற் போலவே (தொ.பொ.359),

"போது சாந்தம் பொற்ப வேந்தி

ஆதி நாதர்ச் சேர்வோர்

சோதி வானந் துன்னு வோரே'

என்பது கொண்டு சமணரெனக் கொண்டாடல் தவிர்க்க முடியாததாகி விடும்.