உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

217

தன்தோள் நான்கின்” எனவரும் பாட லை இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார் (தொல்.பொருள்.50). இதனைச் சேனாவரையர் தம் நூலில் முதற்காப்புப் பாடலாக அமைத்துக் கொள்கிறார். இதனால் இவர் சிவச் சார்பினர் எனின், சேனாவரையர் போலவே தாமும் காப்புச் செய்யுளாக வைத்திருப்பார். சேனாவரையர் சிவநெறியர் என்பதற்கு இது சான்றாமேயன்றி இளம்பூரணரைச் சாராதாம் என்க.

"இசை திரிந்திசைப்பினும்” என்னும் பொருளியல் முதல் நூற்பா உரையில் மேற்கோளாகக் “கார்விரிகொன்றை” என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காட்டும் இளம்பூரணர், 'சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று' என்று உரையெழுதுவது கொண்டு இவரைச் சிவநெறியர் என உறுதிப்படுத்துவர். அஃதாயின், அப்பாடல் தொடரொடு தொடர்பிலாத அச்செறிப்பும், 'தாவில்தாள் நிழல்' என்பதன் பொருள் விடுப்பும் கொண்டு ஐயுறவு கொள்ளற்கு இடமுண்டு! பாடல் தொடரையே இசைத்துத் தொடர்புறுத்தும் அவ்வுரையில் அஃதொன்று மட்டும் ஒட்டா ஒட்டாக இருத்தலும், தாவில்தாள் நிழல் விடுபாடும் பிறிதொருவர் கைச்சரக்கோ என எண்ணவே வைக்கின்றது.

இளம்பூரணர் வள்ளுவர் வாய்மையில் நெஞ்சம் பறிகொடுத்த தோன்றல் என்பது இவர் எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கப் பெருக்கத்தானே நன்கு புலப்படும். அதிகாரங்கள் பலவற்றை அடுக்கிக் கூறுதலாலும் விளங்கும். இத்தகையர் வள்ளுவரைப் போலச் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத சமனிலைச் சால்பினர் என்பதே தெளிவாம். சமயச் சார்பினர் வெளிப்படக் காட்டும் வலிந்த பொருளாட்சி, மேற்கோள் ஆயவை இவரிடத்துக் காணற்கில்லாமல் எச்சமயமும் ஒப்பநினைத்துப் போற்றும் ஒரு பெருந்தகைமையே காணப்படுகின்றது என்க.

தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரும் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவரும் ஒருவரே என்பர். ஒருவர் ஒரு நூற்கு ஒரு பெயரும், மற்றொரு நூற்கு ஒரு பெயரும் கொண்டு உரை வரைந்தனர் என்றல் மரபு நிலைப்படாது. ஒருவர், இருவர், மூவர் பெயர் கொண் டெழுதிப் பிழைக்கும் ‘வணிக நோக்கர்’ அச்சடிப்புக் காலத்தே காண லாமே யன்றிப் பயில்வார் பயன்பாடு என்னும் ஒன்றே குறியாக் கொண்ட ஏட்டுக்காலத்துத் தூயரை அக்கூட்டிற் சேர்க்க வேண்டுவதில்லையாம்.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல நூல்களுக்கு உரை கண்டவர். அவர் தம் பன்னூல் உரையொப்பைச் சுட்டிச் செல்கிறார். அத்தகு குறிப்பொன்றும் இளம்பூரணர் உரையில் இன்மை, இக்கருத்தின் அகச்சான்றின்மைச் சான்றே. ஒரு தனிப்பாடல் செய்தி கொண்டு இம் முடிவுக்கு வருதல் சாலாது. ‘மணக் குடி புரியான்' என்பது ‘மணக்குடவர்’