உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

பெயராகலாம். ஆனால் ‘மணக்குடி புரியராம் அவரே இளம்பூரணர்’ என்பதற்கு அப்பாடல் சான்றாகாது. மற்றும் உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் எனக் கூறும் அடியார்க்கு நல்லார் மணக்குடவராகிய இளம்பூரண அடிகள் என்று கூறத் தவறார். ஏனெனில் உரையாசிரி யர் என்னும் பொதுப்பெயரினும் அவர் குடிப்பெயர் விளக்கமானதன்றோ! தொல்காப்பிய இளம்பூரணருரை முற்றாகக் கிடைத்துளது. அதில் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. திருக்குறள் மணக்குடவருரையும் முற்றாக வாய்த்துளது. அதிலும் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. சிதைவுற்ற நூலாயின் தனித்துக் கிடைக்க பிறர் உரைக்கண் கண்டெடுக்க - முறை யுண்டு. அன்னவகை எதுவும் இல்லாச் சிறப்புப் பாயிரங் கொண்டு முடிவுக்கு வருதல் தகுவது அன்று.

L

இளம்பூரணர் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குத் தரும் பொருளுரை மணக்குடவ ருரையொடும் பொருந்தி நிற்பதைக் காட்டி ஈருரையும் அவருரையே என்பர்.ஈருரையும் பொருந்தாவுரையும் உண்மை யால் வேறுரையாம் என்பார்க்கு மறுமொழி இல்லாமை கண்கூடு.

துறவாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்பது தொல்காப்பியம் (பொ.75).

துறவாவது ஒருவன் தவம் பண்ணாநின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல் என்பது திருக்குறள் மணக்குடவருரை (அதி.துறவு).

ஒப்பியவுரையை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு போற்றுவ தும், ஒப்பா இடத்து மட்டும் தம் உரையும் விளக்கமும் தருதலும் உரை மரபு ஆகலின் இளம்பூரணத்தைக் கற்ற மணக்குடவர் தம் உரையில் அவ்வுரையைப் போற்றிக் கொண்டார் என்பது பொருந்துவதாம்.

இளம்பூரணர் உரையில் காணும் எடுத்துக்காட்டுகளைத் தொகை யிட்டுக் காண்பவர் திருக்குறள் மணக்குடவர் உரையை இவருரையெனக் கொள்ளார் என்பது தெளிவு.

இளம்பூரணர் உரை வழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார். ஆகுபெயர் என்ற அளவானே குறித்தார் தொல்காப் பியர்(சொ.110). அதனை “ஆகுபெயர் என்ற பொருண்மை என்னையெனின் ஒன்றன்பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு” என்றார் இளம்பூரணர். அதனையே நன்னூலார் “ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே” என நூற்பாவாக்கிக் கொண்டார் (பெயர். 33). இவ்வாறு இளம்பூரணக் கொடை மிகக் கொண்டு விளங்கியது நன்னூலாகலின், அந்நூலார் காலத்துக்கு முன்னவர் இளம்பூரணராவர்.