உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

221

உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தால் உலறினேன் என்க. இது தனக்கு உற்றதுரைத்தது” என்பதன் வழியாக அறிய வைக்கிறார் (சொ. 56).

(QFIT.

பிறரொடு தொடர்பு இல்லானைக் ‘கெழீஇயிலி' என்பதும் (சொ.57) தொழில் செய்யும் ஏவலாட்டியைத் ‘தொழீஇ' என்பதும் 122) அரிய சொல்லாட்சியாம்.

'அண்ணாத்தேரி' என்பதை இவர் எடுத்துக்காட்டுவதைத் திருவண்ணாமலையகத்து ஏரி எனக் கருத்துரைத்தார் உளர். அது 'வானம் பார்த்த ஏரி’ என்பதாம். ஆறு, கால் ஆயவற்றின் நீர் வரத்தின்றி வானம் பார்த்து இருக்கும் ஏரியே அப்பெயரியதாம் (எ. 134). 'அண்ணாத்தல்’ (எ.134). ‘அண்ணாந்து நீர் குடித்தல்' என்னும் வழக்குகளைக் கொண்டு அறிக. "அண்ணாத்தல் செய்யா தளறு" என்றார் வள்ளுவர். திட்டாத்துக்குளம் என்று பிறர் கூறுவது மேடுபட்ட குளம் என்றாதல் கருதுக.

66

"காமப்புணர்ச்சி எனினும், இயற்கைப்புணர்ச்சி எனினும், முன்னுறு புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் ஒக்குமென" ஒரு பொருட் பலபெயரைச் சுட்டி ஐயமகற்றுகிறார் (களவியல் முன்னுரை).

செங்கடுமொழி என்பதைக் “கொடிய கடுமொழியேயன்றி மனத்தினால் இனியளாகிக் கூறும் கடுமொழி" என நயமுற விளக்குகிறார் (QLIT. 112).

ஒத்ததெனப் பொதுவில் தோன்றும் இரண்டன் நுண்ணிய வேறுபாட்டையும் அரிதாக விளக்கிச் செல்கிறார்.

“மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின் மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல்; பேதைமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாக் கோடல்” (பொ.248)

'ஐவகை யடியும்' (செய்.48) என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கண முடைத்தாயினும் ஓசையின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப் படும் என்று கொள்க (பொ. 391).

“கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல்.மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல்” என்பவற்றைக் காண்க.

எடுத்துக்கொண்ட ஒன்றை உவமையால் விளக்கும் நயத்தையும் அரிதாக மேற்கொள்கிறார் இளம்பூரணர்.

சிறப்புப் பாயிரத்தில் “பாயிரமென்பது புறவுரை. அறநூற்குப் புறவுரையேல் அது கேட்டு என்னை பயனெனின் கற்று வல்ல கணவற்குக்