உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும் பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்கமான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும் பாயிரம் கேட்டல் பயனுடைத்தாயிற்று” என ஓரிடத்தே மூன்றுவமைகள் வைத்து விளக்குகிறார்.

இகர உகரங்களுக்கும் குற்றியலிகர குற்றியலுகரங்களுக்கும் ஒலியளவையால் வேறுபாடு உண்டாயினும் உயிர் என்னும் பெயரீட்டில் வேறுபாடு இல்லை என்பாராய், “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன” என்கிறார் (எ.2).

உயிர்மெய் ஒலிக்கும் வகையை விளக்கும்போது “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும்” என்கிறார் (எ.18).

இதழ் போறலான் வாய் இதழ் எனப்பட்டது' என வாய்க்கு இதழ் எனப் பெயர் வந்த பொருத்தத்தை உவமையால் விளக்குகிறார் (எ.83).

வவ

கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பற்றிக் கூறும்போது, “துள்ளுத லாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடையுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற் றென்றாற்போலக் கொள்க” என்கிறார் (பொ.387). இவ்வாறே பிறவும் வரும் உவமைகளும் உள.

உவமையின் பயன், “புலன் அல்லாதன புலனாதலும், அலங்கார மாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்”, என்று உவமையியல் முகப்பில் கூறும் அவர்தம் உவமைகளால் தம் கருத்தை மெய்ப்பிக்கிறார் என்க. உரைவளம்

இளம்பூரணர் உரைவளம், வேண்டுமிடத்து வேண்டுமளவான் விளங்கி நலம் சேர்க்கின்றது.

எழுத்தை எட்டுவகையாலும் எட்டிறந்த பலவகையாலும் உணர்த்தி னார் என அவற்றைக் குறிப்பதும் (எ. முகப்பு) செப்புவகை ஆறு என்பதும், வினாவகை ஐந்து என்பதும் (சொ.13) தகுதி, வழக்கு ஆகியவற்றைப் பற்றிப் பகுத்துரைப்பதும் (சொ. 17) முதலியவை நன்னூலார் முதலிய பின்னூ லோர்க்கு உதவிய உரைவளங்களாம்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் நூற்பாவுக்கு (சொ. 152) "பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறியாது நில்லா” என