உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

223

உரை கூறுகின்றார். 'பொருள் குறித்து நிற்கும்' என்னாமல், பொருள் குறியாது நில்லா என்று ஈரெதிர் மறைகளால் உடன் பாட்டுக் கருத்தை வலியுறுத்துவது, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; அவ்வாறு குறியாதது சொல்லன்று” என்பதை உறுதிபடக் கூறுவதற்கேயாம்.

66

முக்காலங்களையும் சுட்டும் இளம்பூரணர், 'இறப்பாவது தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை” என்கிறார். எளிமையும் அருமையும் மிக்க குறிப்புகள் இவை.

கைக்கிளை ‘சிறுமை உறவு' என்று கூறவேண்டுமெனக் கருதுகிறார் உரையாசிரியர். அதனை, “கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாகலின்' என விளக்கியமைகிறார் (பொ. 1). கை சிறுமைப் பொருட்டாதலை நிறுவுதற்கு நடைமுறைச் சான்றுகள் பலவற்றை அடுக்குகிறாரே! பொருள் விளக்கம் செய்தலிலும் அவர்க்கிருந்த பற்றுதலின் விளைவு தானே இது!

பிரிவு என்னும் உரிப்பொருளைக் கூறும் தொல்காப்பியர், 'கொண்டு தலைக் கழிதலும், பிரிந்தவண் இரங்கலும்' என இரண்டாகப் பகுத்துக் கூறுகின்றார். இதனை, “கொண்டுதலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமை யானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப்பட்டது” என நூலாசிரியர் கருத்தைத் தெளிவு செய்கிறார் (Qlist.17).

66

இளமை தீர் திறம்” என ஆசிரியர் கூறினாராயினும் அதனை, "இளமை தீர் திறமாவது; இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய வழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலின்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என” என்கிறார். “எண்ணி உரைகாரர் ஈவார்” என்பதை மெய்ப்பிப்பவை இத்தகையவை (பொ.54). “கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்” என்பதன் விளக்கமும் காண்க (பொ.87).

‘ஏறிய மடற்றிறம்' முதலாக ஆசிரியர் சொல்லும் உடன்பாடுகளை ‘ஏறா மடற்றிறம்' முதலாக எதிர்மறையாக்கிக் கொண்டு இளம்பூரணர் கூறுவது வியப்பு மிக்கது (பொ. 55).