உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

“மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்பதற்கு, “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்” எனப் பொருள் வரைந்து, “இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழுதுணர்ந்தோர்க்கல்லது புலப்படாமையின் அது பொருளன் றென்க” என விளக்குகிறார். தாம் சுட்டிய பொருளே பொருளெனப் பன்னிருபடலச் சான்று காட்டுகிறார். “அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது பகலும் இரவும் இடை விடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல்” என மேல் விளக்கம் செய்கிறார் (பொ.74). எத்தகு நாகரிகமாக மறுக்கிறார். அவருரை முதலுரையாகலின் மறுப் புரை மிகக் கூறவேண்டும் நிலையில்லை. எனினும் பல்வேறு பாடங் களும் உரைகளும் பற்பலரிடத்துக் கேட்டிருக்கக்கூடும். அவற்றை உட்கொண்டு ஒரு விளக்கம் கூறுகிறார்.

"பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறைகள் கூறினாராதலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலு மாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க என அமைதி காட்டுகின்றார். ஆகலின் மறுப்புக் கூறுதலில் இளம்பூரணர் பெரிதும் மனங் கொண்டிலர் என்பதும், கற்பார் தம் ‘நுண்மாண் நுழைபுலத்தால்' கண்டுகொள்வார் என அமைந்தார் என்பதும் விளங்கும்.

தலைவிக்குக் களவில் கூற்று நிகழுமிடங்கள் என்பது குறிக்கும் துறைகளுள் ஒன்று ‘கட்டுரை இன்மை' என்பது. அதற்குச் சான்று வேண்டுமோ? 'கட்டுரை இன்மைக்குக் கூற்று நிகழாது' என்பதும் கூறுகின்றார். எவரேனும் அதற்குச் சான்று இல்லையே என ஐயுறுவரோ என்பதை உன்னித்த குறிப்பு இது (பொ.109).

'சிற்றாறு பாய்ந்தாடும்' எனப் பன்னீரடிப் பஃறொடை வெண்பா ஒன்றைக் காட்டுகிறார் இளம்பூரணர் (பொ.123). அதில், “இது பன்னிரண் டடியான் பெருவல்லத்தைக் கூற வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா” என்று குறிப்பு வரைகிறார். 'பெருவல்லம்' என்ற பெயர் இல்லாக்கால் இப் பாடற் பொருள் எவ்வாற்றானும் காணற்கரிது. ஆதலால் 'திறவு' வேண்

L