உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

225

டுங்கால் தந்து செல்லும் ‘திறம்' இளம்பூரணர் உடைமையாக இருந்துளது எனலாம்.

அவரே, 'சூத்திரத்தாற் பொருள் விளங்கும்' எனவும் (பொ. 585) விடுத்துச் செல்கிறார்.

சில வழக்காறுகள்

இளம்பூரணர் காலத்து வழக்காறுகள் சில அவர் உரை வழியே அறிய வாய்க்கின்றன.

எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் வழங்குவதுபோல் 'நம்பி' என்னும் பட்டம் வழங்குதல் (எ. 155), மகப்பாலுக்காக ஆடு வளர்த்தல் (எ. 220), புளிச்சோறு ஆக்குதல் (எ. 247), பேயோட்டுதல் (சொ. 312), வெள்ளாடை மகளிர் உடுத்தல் (சொ. 412), தைந்நீராடல் (சொ. 50), குறித்ததொரு நாளில் கறந்தபால் முழுவதையும் அறத்திற்கென ஆக்குதல் (சொ. 50), ஆடு மாடுகள் தினவுதீரத் தேய்த்துக் கொள்ள ‘ஆதீண்டு குற்றி’ நடுதல் (சொ. 50), சேவற் சண்டை நடத்துதல் (சொ. 61), ஒற்றிக்கலம் (ஆவணம்) எழுதுதல் (சொ. 76), நெல்லடித்துத் தூற்றும் களத்திற்குத் 'தட்டுப்புடை' எனப்பெயர் வழங்குதல் (சொ. 77), வெற்றிலையும் பூஞ்செடியும் நடுதல் (சொ. 110), பொழுதின் ஒரு பகுதியைக் கூறு எனக் கூறுதல் (பொ. 9) முதலிய வழக்காறுகள் ஆங்காங்கு அறிய வருகின்றன.

பல்துறைப் புலமை

நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைக் கூறுவதும் (எ. 7), “கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின” என்றும், “எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையால் பைங்கூழ் நல்ல" என்றும் கூறுவதும் (சொ.21, 22) “விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பின” எனலும் (சொ. 416) வாளானும் தோளானும் வேறலன்றி, “சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும்" எனப் போர்வகை அடுக்குதலும் (பொ. 74) (அடியர்) “அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணை யாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும், இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக்கருதுவராகலானும், இன்பம் இனிது