உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

நடத்துவார் பிறரேவல் செய்யாதார்” என்பதனானும் “இவர் புறப் பொருட் குரியராயினார் என்க" என்பதனானும் பிறவற்றாலும் இளம்பூரணர் பல்துறைப் புலமை நன்கறிய வருகின்றது.

“சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும்; தந்தை உவக்கும்” என்பதால் உரையாசிரியர் கையெழுத்தழகை எவ்வளவு விரும்பினார் என்பது விளங்கும் (சொ. 40).

"மனைவியைக் காதலிக்கும்; தாயை உவக்கும்” என்பவற்றால் வாழ்வியல் நுணுக்கத்தை எவ்வளவு தேர்ந்திருந்தார் இளம்பூரணர் என்பது விளங்கும் (சொ.72).

மணந்தபின்னரும்

மனைவியைக் காதலிக்கலாம் எனவும்,

ஒருத்தியை மணந்த பின்னரும் தன் தாயை உவந்து பாராட்டலாம் எனவும் கூறல் அத்தகைய தூய துறவர் இல்லறம் நல்லறமாகத் திகழ வழிகாட்டவும் வல்லார் என்பதை மெய்ப்பிப்பதாம்.