உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

பெயரும் குடிவழியும்

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர்.

"நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே’

என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66:1). இதில் பெயராக வந்திலது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடி களுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், “நச்சினார்க் கினியாய் போற்றி" என்றதும் இயல்விளிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறிந்தவர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்துவிட்டது எனலாம்.

6

‘மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்' என்று தொல் காப்பியம், பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல்,

"வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன்

நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்

தானே யாகிய தன்மை யாளன்

நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்”

என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் “பாரத்துவாச கோத்திரத்தார் ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும்.பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர்” என்றும் கூறுவர் (உரையாசிரியர்கள் பக். 141; நச்சினார்க்கினியர் பக்.6,7).

சமயம்

இவர் வேத வழிப்பட்ட நெறியினர் எனினும் 'சிவச்சுடர்' எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச் சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார். ஒரு நூலுரை செய்தற்காகத் தம் வழிவழிச்