உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

எதிரிடை

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

6

""

(கற். 4)

என்னும் நூற்பாவில், “ஈண்டு 'என்ப என்றது முதனூலாசிரியரை யன்று; வடநூலோரைக் கருதியது” என்கிறார். இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த நோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத்துணிந்தார். அதனால், “அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்” (கற். 1) என்றும் “முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது” (கற். 2) என்றும், “மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தருவரும் அங்கியும்” என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங் களும், “வேத முடிபு” (அகத். 5), “வேத நெறி அன்மை” (அகத். 11), “வேத நூலுள் இழைத்த பொருண் முடிபு” (அகத். 28), “வேதத்தையே” (அகத். 31), “வேதவிதி” (புறத். 2), “வேத முடிபு” (கள. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக்கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ

டுச் செல்லுதல் தெளிவாகின்றது. கந்தருவநெறிக்கும் களவுநெறிக்கும் உள்ள வேறுபாட்டை, "கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்” என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தார் நச்சினார்க்கினியர் (கள. 1) என்பதை மறக்க முடியாது.

அறிந்தே செய்யும் பிழை

காலம் உலகம் என்னும் சொற்களை வடசொற்களாகச் சேனா வரையர் கூற, “காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராகலின்" (சொல். 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் "அகர இகரம் ஐகாரமாகும்”, “அகர உகரம் ஔகாரமாகும்” என்னும் நூற்பாக்களின் உரைகளில் அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க”; “அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஒளகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க சைக்கும்; அது கொள்ளற்க" என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறுகொளல் என்பது தெளிவாகின்றது.

66

மேலும், “ஆகும் என்றதனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று” என்றும் கூறுகிறார். இஃது இவர் அறியாமையால் செய்வதன்று என்பது விளங்குகின்றது.சில இடங்களில் வலிந்து சூத்திரங்களை நலித்துப் பொருள்