உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

231

கூறும் வழக்கினை இவர் மேற்கொண்டவர் என்பதும் அதையும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பதும் விளங்குகின்றது.

"அளபிறந் துயிர்த்தலும்” எனவரும் நூன்மரபு நூற்பா (33)

விளக்கத்தில்,

66

"சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற

இன்றி யமையா தியைபவை எல்லாம்

ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே’

என்னும் மரபியற் சூத்திரத்தானே (103) “இவ்வாறே சூத்திரங்களை நலித்துப் பொருளுரைப்பன வெல்லாம் கொள்க” என இவர் எழுதுதல் இவர் தம் உட்கோளைத் தெளிவாக்கும்.

“வரகு, கொற்றன் ஈரெழுத் தொருமொழி; அகத்தியனார் ஐயெழுத் தொருமொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத் தொருமொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத்தொரு மொழி” என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரைநடைக் கோட்பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகிவிடுகின்றது.

கரணம் வடநூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம். 86, 136ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுளோ அறிகரியாக மந்திர வகைக் கரணமோ ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும்கூட, “கரணங்கள் நிகழ்ந்த வாறும் தமர் கொடுத்தவாறும் காண்க” என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்ப து பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா?

L

ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க்கினியர், “ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் ‘இடையெழுத் தென்ப யரல வழள' (எழுத். 21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயையுடைமை கருதிச் சேரவைத்தார் போலும்” என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய்கின்றாரே! (நூன்.1).

'கண்ணிமை நொடியென' ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, "நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமை யின்” என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன்.7).

66

'இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்ணே