உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன்.24).

'காரும் மாலையும் முல்லை' என்னும் ஆசிரியர் நூற்பா நடைக்கு, "முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப் படுவது கார் காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக் குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று" என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுது கின்றார் நச்சினார்க்கினியர் (அகத். 6), நூலாசிரியரோடு ஒப்ப ஒரு

நூலாசிரியராயன்றோ திகழ்கின்றார்!

இவ்வாறாகவும், வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை - ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை - நடுவுள்ளங்கொண்டு நாடுவாரையும் வருத்தும். “இது போன்ற உரைகளையெல்லாம் தொல்காப்பியர் காண நேர்ந்தால் எத்துணை நொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணைக் காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப் பதுதான் வியப்பாகும்” என்றும் “நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாதவராயினும் வேத வைதிகப் பற்றுமிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் 'வேதம் வேதம்' என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம்” என்றும், “அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜான்ஸன் காலத்தில் ஜான்ஸன்ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக்கொள்ளலாம். பாட்டின் சொல் லமைப்பை அவர் எப்படிச் சிதைத்தாலும் பண்டிதர் பரம்பரை வழிவழி