உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

233

யாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத்தக்கது” என்றும் வருவன (நச்சினார்க்கினியர் - பேரா. மு. அண்ணாமலை) தெளிந்து கூறிய

தேர்ச்சியுரைகளாம்.

"உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்" என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த்திருந்தும், உணர்த்தக் கேட்டும் கற்றும் - இருந்தும், இந்நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள - - மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங்கூறியே விழுப்பம் எய்தினர் என்னும்போது அக்காலச்சூழலில் நச்சினார்க்கினியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை!

நச்சினார்க்கினியர் புலமை, 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப் புடைத்து' என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக்காட்டுகள்! எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள்!

66

“ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப” (நூன். 2).

“கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறந்த செவ்வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார்” (நூன்.6).

66

அகரந் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை யுடைத் தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல" (நூன்.8).

66

“ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடை யன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாரி யுப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வ தோர் பொருட்பெற்றி” (நூன்.10).

வை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று 'பெரும் பொருள் விளக்கம்' என்பது. அந்நூலைப் புறத்திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது.புறத்திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை