உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

"செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே"

241

என விளக்குகிறார் (16). இந்நூற்பா விளக்கத்தில் சேனாவரையர், 'நுண்ணுணர் வுடையார்க் கல்லது அதனால் உணர்தலாகாமையின் விரித்துக் கூறியவாறு” என நூலாசிரியர் பேரியலை வெளிப்படுத்துகிறார். இவ்வாறே, “ஆக்கந் தானே காரண முதற்றே” என்னும் நூற்பா விளக்கத் திலும் (21) நுண்ணுணர் வுடையார்க்குத் தம்மரபினவே (ii) என அடங்குவ ஆயினும் ஏனை உணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணரலாகாமையின் விரித்துக் கூறினார்” என்கிறார்.

ஆசிரியர் வெளிப்பட விளக்கும் இடங்களில், வேறொரு வாய்பாட்டானும் சேனாவரையர் கூறுகிறார்:

“இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை

வழக்கா றல்ல செய்யு ளாறே”

என்னும் நூற்பாவில், “ஒன்றன தாற்றலான் ஒன்று பெறப்படுதலின் வழக்காறல்ல என்றானும், செய்யுளாறு என்றானும் கூற அமையுமெனின், ‘உய்த்துணர்வது சொல் இல்வழி' எனமறுக்க” என்கிறார். வேண்டும் சொல் இல்லாக்கால்தான் உய்த்துணர வேண்டும் என்னும் நெறியை இவ்வாறே மேலும் கூறுவார் (43,133).

வேறுரைகள்

சேனாவரையர்க்கு முன்னரே சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையெழுதியிருந்தார். அவருரை சேனாவரையர் உரைத் தெளிவுக்கு மிக உதவியிருக்கும். இளம்பூரணரின் ஆய்வின் மேல் ஆய்வு சேனாவரையர் செய்தலால், உரைச்செப்பங்களும், விளக்கங்களும் கிடைத்தல் இயற்கை. ஆதலால், முதல் நூற்பாவிலேயே உரையாசிரியரைச் சுட்டுகிறார் சேனா வரையர்.

“சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்து என்பார் 'எழுத்தொடு புணர்ந்து' என்றாராகலின், ஒருபுடை ஒற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால் ஓரெழுத் தொருமொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தா தென்க” என்று கூறி உரையாசிரியரைப் பாராட்டுகிறார்.

உரையாசிரியரை ஐம்பத்திரண்டிடங்களில் சுட்டிச் செல்கிறார் சேனாவரையர். ‘அவர்க்கு அது கருத்தன்று என்க' என்னும் வாய்பாட்டால் 27 இடங்களிலும், ‘அவ்வுரை போலியுரை என்க' என்னும் வாய்பாட்டால் 18 இடங்களிலும், 'உரையாசிரியர் கருத்து இதுவேயாம்' என ஓரிடத்தும்,