உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

245

உலக வழக்கு நடை இத்தகைத்து என்பதை அருமையாகக் குறிக்கிறார் சேனாவரையர் (416).

'உலக வழக்காவது சூத்திர யாப்புப்போல மிகைச்சொற்படாமைச் சால்லப்படுவதொன்றன்றி, மேற்றொட்டுங் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவது'

உலக வழக்கை விளக்கும்போதே, சூத்திர யாப்பு இத்தகைத் தெனவும் சொல்லி இரு வழக்கையும் விளக்கும் அருமையது இது.

இரண்டன் வேறுபாடுகளை விளக்கிக் காட்டலிலும் விழிப்போடு

இருக்கிறார் சேனாவரையர்.

66

இனத்தொடு சார்பிடை வேற்றுமை என்னை எனின், ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனமெனப்படும். அணைந்த சாதியன்றி ஒருவாற்றான் இயைபுடையது சார்பெனப்படும் என்பது.” (53)

அவை.

66

"குறிப்பு

மனத்தாற் குறித்துணரப்படுவது;

பண்பு - பொறியான் உணரப்படும் குணம்” (297) - இத்தகையவை

“ஈண்டு இரட்டை ரட்டைக் கிளவி என்றது மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமையுடையவற்றையன்றி இலையிரட்டையும் பூவிரட்டை யும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”, என்பது போன்ற இடங்களில் இலக்கணத்தை இலக்கியச் சுவைபடச் செய்யும் நேர்த்தியராகச் சேனாவரையர் விளங்குகின்றார்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் சேனாவரையரை மிக மிகப் போற்றியவர் சிவஞானமுனிவரர். “வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்” எனப்பாராட்டும் முனிவரர், “எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தார் ஆயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்து உரைப்பர்” என்றும் தொடர்ந்து எழுதுகின்றார் (தொல்காப்பிய சூத்திர விருத்தி).

மொழி என்பதாம் 'பாஷை' யைப் பாடையென வழங்குகிறார் சேனாவரையர் (397); வட பாடைஎன்றும் சொல்கிறார் (401).

தமிழ்ச் சொல் வட பாடைக்கட் செல்லாது என்னும் கொள்கை யுடைய ய இவர் (401), ‘குமரி வடமொழிச் சிதைவு என்றும் (196) நீர் ஆரியச் சிதைவு என்றும் (398) கூறுவது வியப்பாகாது.

செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களுள், “திசைச் சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும் செய்யுட்குரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரியவாகா. இவ்வாறாதல்