உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க” என்னும் செய்தி சங்க நூற் பரப்பை முழுதுறக்கண்டு கூறிய முடிவுடையதாம்.

ஞாபகம், அநுவாதம், யோகவிபாகம், நேயம், காரகம், தாது இன்னவற்றை ஆங்காங்குரைத்து விளக்குகிறார்.பதினைந்து இடங்களுக்கு மேல் சேனாவரையரின் வடமொழிப் புலமை அறியும் வண்ணம் உரை விளக்கம் அமைந்துள்ளது.

தொல்காப்பியர் வடநூலொடு மாறு கொள்ளாமல் நூலியற்றியவர் என்பதை முடிந்த முடிவாகக் கொண்டு உரை வரைந்தவர் சேனாவரையர் என்பது, "வடநூலுள் பொருள் வேற்றுமையான் அல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையும் ஓதப்படாமையானும் ஈண்டும் எல்லா ஆசிரியரும் ஒரு வேற்றுமையாகவே ஓதினார் என்க. வடநூலொடு மாறு கொள்ளாமைக் கூறல் ஆசிரியர்க்கு மேற்கோளாயின் விளி வேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற் பாலராவர். அவ்வாறடக்கலிலார் எனின், அற்றன்று; விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தன்று” என்பதால் (74) புலப்படும்.

சேனாவரையரின் கல்வி யாழத்தையும் உரைச்செறிவையும் நூன்முழுவதும் கண்டு மகிழ்வார், அவர்தம் பண்புச் செறிவையும் ஓரிடத்தில் அறிய வாய்க்கின்றது. அது,

“வினைச் சொற் காலமுணர்த்துங்காற் சில நெறிப்பாடுடைய ய வென்பது விளக்கிய, 'நெறிப்படத்தோன்றி' என்றார். நெறிப்பாடாவது அவ்வீற்று மிசைநிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்ற உணர்த்த லாகாவாயினும், அவ்வீறுணர்த்தும் வழிச் சிறிய சொல்லுதும்” என்பதாம்

(201).

ரையாசிரியர்க்கு அது கருத்தன்று' என்று கூறும் அளவில் நாம் அமைகின்ற நிலையும், 'போலியுரை' என்று கூறும் இடங்களிலெல்லாம் நாம் அடைகின்ற புண்பாடும், 'முற்ற உணர்த்தலாகாவாயினும், சிறிது சொல்லுதும்' என்பதைக் காணும்போது மாறி ஒரு மயக்க நிலைக்கு ஆட்படுகின்றோம். தாம் காணும் உண்மைப் பொருள் காட்டலில் சேனாவரையர்க்குள்ள தணியா வேட்கையே ‘போலிக் காய்வை’ உண்டாக் கிற்றுப் போலும்.

'பெயர் நிலைக் கிளவியும்' என்னும் எச்சவியல் நூற்பாவில் வரும் 'தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும்' என்பதற்கு, "முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்று உரை கூறி, "யாற்றுட் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன் என்பதுமுதலாயின" என்கிறார் சேனாவரைவர்.