உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

263

நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான்" என்னும் பேராசிரியர் உரையே தெளிவிக்கும் (செய். 189). ‘அறிவன் தேயம்' (புறத். 16) என்பதில் வரும் ‘அறிவன்' என்பதற்குக் ‘கணியன்' என உரையாசிரியர் வரைந்ததையும் அறிந்து கொள்க. ஆகலின் அறிவன் வழிபாடு அஃது என்றும், பார்ப்பான் என்னும் சொல் தூய செந்தமிழ்ச் சொல்லாதலையும், அவ்வாறே ‘அந்தணன்’ என்னும் சொல் இருத்தலையும் எண்ணின் இவை தமிழ் நெறிய வழிபாடுகளே என்பது விளங்கும். விளங்கவே பேராசிரியர் தமிழ் நெறி வழிபாட்டாளர் என்பது உறுதியாம். ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டாக இவர் கூறுதலால் இவர் ஆரியரல்லர்; இப் பார்ப்பார் ஆரியரில் வேறாவர் என்பது தெளிவாம்.

6

மேலும் "வினையின் நீங்கி" என்னும் நூற்பாவுரையில் (மர. 94), "பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவ தென்பது" என்று இவர் வரைவதும், ‘சேவற் பெயர்க்கொடை’ என்னும் நூற்பா (மர. 48) உரையில், "மாயிருந்தூவி மயில் என்றதனால் அவை தோகையுடையனவாகிப் யனவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலான் ஆண்பாற்றன்மை இலவென்பது கொள்க; எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது" என்று வரைவதும் கருதத் தக்கன. இவை கட்டாயமாக நூற்பாப் பொருள் கூறும் வகையிலோ, அந்நூற்பாத்தொடரை விளக்கும் வகையிலோ அமைந்தவை அல்ல; உரையாசிரியர் தம் பற்றுமைச் சான்றாக வெளிப்பட்டு நிற்பனவாம். 'இறையனார்' என்பது நூல்யாத்தவர் பெயராகக் குறிக்கப்பட்டிருக்கவும் பருமானடிகள்' என்றது இவர் தம் உணர்வு வெளிப்பாடேயாம். இவையும் பேராசிரியர் சமய உட்கிடைப் பொருளாவனவாம். நூலாசிரியரை மதித்தல்

ஆசிரியர் தொல்காப்பியர் குறித்தும் அவர்தம் நூல்வழி குறித்தும் சில குறிப்புகளைப் போராசிரியர் சுட்டுகிறார்.

‘எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது (தொல்காப்பியம்) முன்னூலாதலின் இவரோடு (தொல்காப்பியரோடு) மாறுபடுதல் மரபன் றென மறுக்க இசை நூலுள்ளும் மாறுபடுதல் அஃது அவர்க்கும் மரபன்று என்பது' என்னும் உரைப்பகுதி தொல்காப்பியர் ஆணை வழிநிற்கும் இவர்தம் செவ்வியைப் புலப்படுத்தும் (செய். 140). மேலும், "நண்டிற்கு மூக்குண்டே ா எனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம்" என்னும் இவருரை (மர. 31) அவர்தம் ஆணையே ஆணை யெனக் கொண்டு உரை எழுதியமை காட்டும்.

அகத்தியமே முதனூல் என்றும், அதன் வழிநூல் தொல்காப்பியமே என்றும் அதனை மறுத்துக் கூறுவது வேதவழிப்படாத இக்காலத்தார்