உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

269

பரணி, பரிபாடல் (பரிபாடல் எழுபது), பாட்டும் தொகையும், பாட்டு மடை, பாவைப்பாடல், பெருந்தேவனார் பாரதம், பெருமானடிகள் (இறையனார்), பேரிசை, பொய்கையார், மாலை,. மிறைக்கவி, முத்தொள் ளாயிரம், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யாப்பதிகாரம், வஞ்சி, வசைக்கூத்து, வரி, விளக்கத்தார் கூத்து என்பனவும் பிறவும் இவர் சுட்டிச் சொல்லும் சிறப்புப் பெயர்கள்.

உலகியலறிவு

பேராசிரியர் கொண்டிருந்த உலகியலறிவு ஆங்காங்கு அறியக் கிடக்கின்றது. ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு கிறார் (மெய்ப். 1). சாதித்தருமம் போற்றுதலைக் குறிக்கிறார் (மெய்ப். 12). காடுகெழு செல்வி (காளி) வழிபாட்டைப் பல இடங்களில் கூறுகிறார் (மெய்ப். 12; செய். 149). நான்கு வருணங்களைக் குறிக்கிறார் (மெய்ப். 25). தமிழில் மந்திரப்பாட்டு இருந்ததைச் சுட்டுகிறார் '(செய்.158; 178). 'ஆரியம் நன்று தமிழ் தீது' என்றவன் சாவவும், உயிர்த்தெழவும் பாடிய பாட்டுகளை யுரைத்து, இவை "தெற்கண் வாயில் திறவாதபட்டிமண்டபத்தார் பொருட்டு ந க்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்" என்று குறிப்பு வரைகிறார் (செய்.178). சீட்டுக்கவி வரைதல் வழக்கை ‘ஓலைப்பாயி (சு)ரம்’ என்கிறார் (செய்.149). அவ்விடத்திலேயே களம்பாடு பொருநர் கட்டுரை, தச்சு வினைமாக்கள் சொற்றொடர் என்பவற்றையும் குறிப்பிடு கிறார். "ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடியது", "சிறுகுரீஇயுரை", "தந்திரவாக்கியம்" என்பவற்றையும் (செய். 173), யானை, கமுகு, நெருப்பு என்னும் பொருள் தரும் விடுகதைகளையும் (செய்.176), குறிப்பு மொழிக்கு ‘யானை' என்பதையும் (செய்.179) இவர் எடுத்துக் காட்டுப் பா ல்களால் கூறுதல் அக்காலத்து மக்களிடை வழங்கிய வழக்கின் தொகுப்பு எனற் பாலன.புலவுத் துறந்த துறவோர் பொய் கூறார் என்று கூறுவதால் அக்காலத் துறவோர் சிறப்பும் (மர.94),புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம் என்னும் உளவியல் செய்தியும் (மெய்ப்.12) கூறும் பேராசிரியர் உலகியல் திறம் பெரிதென அறியலாம். இலக்கிய வன்மை

6.

‘புகுமுகம் புரிதல்' முதலாக வரும் மெய்ப்பாடுகள் அனைத்துக்கும் முறையாய் அமைந்த எடுத்துக் காட்டுப் பாடல்கள் பேராசிரியர் இயற்றியன என்றே கொள்ள வாய்க்கின்றன; இவர்தம் இலக்கியப் படைப்புச் சீர்மையை விளக்குவனவாக அமைகின்றன. அன்றியும் இவர் சில இடங்களில் வரையும் உரையே பாவாக இயலுதல் காணக்கூடியனவாம்.

மெய்ப்பாட்டியல் பன்னிரண்டாம் நூற்பாவில்,