உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

கொடை என்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல்"

இவ்வாறு பன்னூறு சொற்களுக்கு விளக்கம் வரைகிறார்

பேராசிரியர்.

பேராசிரியர் சால்பு

நூலாசிரியர் எண்ணத்தைத் திட்டமாகத் தெளிய முடியாத இடத்தில் தாம் பொருள் கொள்ளும் முறையால் அவர்க்குக் குறை நேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சத்தால், 'நாம் பகுத்து எண்ணிக் கொண்டாம்' எனத் தம்மேல் அக்கருத்துடைமையை அள்ளிப் போட்டுக் கொள்ளுதல் பேராசிரியர், 'பேராசிரியரே' என்பதை மெய்ப்பிக்கும் சான்றாம்.

'பிறப்பே குடிமை' என்னும் றூற்பா, ஒன்பது பொருள்களை எண்ணுகின்றது.அதனைப் பத்தாக்கிக் கொள்கிறார் பேராசிரியர். அதனால், "இங்ஙனம் ஓதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமாறு என்னை எனின், காமவாயில் எனப்பட்ட இயற்கையன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையானும் குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலானும் உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினான் ஆயினும், உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்து எண்ணிக்கை கொண்டாம் என்பது.என்னை?

“வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு

என்புழி, 'கற்றறிதல்' என்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாகலின்" என்கிறார்.(மெய்ப்.24).

சிறப்புப் பெயர்கள்

பேராசிரியரின் பரந்த புலமை பெரிது. அதனை இவர் சுட்டும் நூற்பெயர்களும் சிறப்புப் பெயர்களும் காட்டும்.

அகத்தியர், அம்மானைப்பாடல், அவ்வையார், ஆனந்தவுவமை, இசைக்கூத்து, எழுகூற்றிருக்கை, ஏகபாதம், ஏழிற்கோவை, ஐயனாரிதனார், கட்டளைக் கலி, கடகண்டு, கடைச்சங்கத்தார், கலம்பகம், கலித்தொகை (நூற்றைம்பது கலி), களவியல், காக்கை பாடினியார், கானப்பேர், குறிஞ்சிப் பாட்டு, கைக்கிளைப் படலம், கொங்குவேளிர், கோவை, சக்கரம், சகரர், சங்கச்சான்றோர், சாய்க்காடு, சிற்றிசை, சிறுகாக்கை பாடினியார், சீத்தலைச்சாத்தனார், சுழிகுளம், தகடூர் யாத்திரை, நக்கீரர், நரிவெரூ உத்தலையார், நாடகச் செய்யுள்,பட்டிமண்டபம், பதினெண்கீழ்க்கணக்கு,