உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

13

களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம்.

66

“அளபெடைப் பெயரே அளபெடை இயல்"

“தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல

என்பவற்றைக் காண்க.

எதுகை மோனை நயங்கள்

எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்

காப்பியர்.

"வஞ்சி தானே முல்லையது புறனே

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென்றடல் குறித் தன்றே”

"ஏரோர் களவழி அன்றிக் களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும் "

இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்"

இவை அடி எதுகைகள்.

“விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே”

"நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”

முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும்

மோனைகளும் தொடைபட

படக் கிடந்து நடையழகு காட்டல் அறிக.

முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை.

“வயவலி யாகும்'

"வாள்ஒளி யாகும்"

“உயாவே உயங்கல்”

“உசாவே சூழ்ச்சி”

இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம்.

அடைமொழி நடை

மரம்பயில் கூகை செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று.