உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

“இழுமென் மொழியால் விழுமியது பயிலல்'

66

‘எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் ’

இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று.

6

"மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே

"ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்

என எடுத்த எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. 'மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம்.

வரம்பு

இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம்.

66

“வகரக் கிளவி நான்மொழி ஈற்றது

“அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”

இன்னவாறு வருவனவும் வரம்பே.

விளங்க வைத்தல்

விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல் காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர்.

“தாமென் கிளவி பன்மைக் குரித்தே "தானென் கிளவி ஒருமைக் குரித்தே

"ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி

இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை

இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்?

நயத்தகு நாகரிகம்

சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இ க்கர்ப்பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும்