உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் - தெளிவுரை

வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரிமலை முடிய இடைப்பட்ட நிலம் தமிழ் வழங்கு நிலமாகும். இந்நிலத்தில் வழங்கும் மக்கள் வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்து, சொல், பொருள் என்பவற்றை ஆராய்ந்து செய்யப்பட்டது இத் தொல்காப்பிய நூல்.

இது, இச் செந்தமிழ் நாட்டின் இயல்பொடு பொருந்தச் செய்யப் பட்டது. இந்நாட்டில் பழங்காலம் தொட்டு வழங்கிவரும் நூல்களைக் கற்றும் அவற்றை முறையுற ஆராய்ந்தும் வாழ்வியலுக்கு இன்றியமையாத அறிவுச் செல்வங்கள் எல்லாமும் ஒருங்குறத் தொகுக்கப்பட்டது குற்றமற்ற இந்நூல். இது, நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் வேந்தன் அவையில் அரங்கேற்றப்பட்டது. அறம் உரைக்கும் நாவினையுடையவனும் நான்மறை வல்லானும் ஆகிய அதங்கோட்டு ஆசான் என்பான் தலைமை கொண்டிருந்தான்.

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் கூடிய அவ்வவை யில் அவர்கள் குறைவற அறியவும் மயக்கமற உணரவும் நூன்முறை வழுவாமல் காட்டியவன் யாவனோ எனின், அவன் நீர் நிரம்பிய கடல் சூழ்ந்த உலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுறத் தோற்றுவித்த ஆற்றலாளன் எனப் பாராட்டப்பட்டவனும், தன்பெயரைத் தான் இயற்றிய நூல் வழியால் தொல்காப்பியன் என நிலைநிறுத்தியவனும், பல்வகைப் புகழுக்கும் இருப்பாகியவனும் சீரிய தவத்தவனும் ஆகிய பெரியோன்.

வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்