உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

‘ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது”

(435)

என்பதால் பன்னீராயிரம் என்பதற்கு இலக்கணம் காட்டுகிறார். “பன்னீரி யாண்டு வற்கடம் சென்றது” என்பது களவியல் உரை. 'முந்நீர்ப் பழந் தீவு பன்னீராயிரம்' என்பது கல்வெட்டு.

மொழிக்காவல்

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் வழியாக அறியப் பெறும் வாழ்வியல் வளங்களுள் சில இவை. இவ்வதிகாரத்தைச் சொல்லி முடிக்கும் ஆசிரியர் சொல்லிய அல்லாத திரிபுகள் செய்யுள் வழக்கிலோ மக்கள் வழக்கிலோ காணக் கிடப்பின் அவற்றையும் உரிய வகையால் அமைத்துப் போற்றிக் கொள்க என்கிறார். தமிழ்மொழி வழக்கழிந்து படாமல் என்றும் உயிருடைய மொழியாகத் திகழவேண்டும் என்னும் மொழிக் காவல் உள்ளத்தின் வெளிப்பாடே இஃதாம் (483). இவ்வாறு இயல்களி லும் அதிகாரங்களிலும் கூறுவன மொழியின் விரிவாக்கத்திற்கு ன்பட்டு

வழிவகுப்பதாகும்.

(குறிப்பு : தொல்காப்பிய நூற்பா எண்களாகக் குறிக்கப்பட்டவை எல்லாமும் சை.சி. கழகத் தொல்காப்பிய மூலப்பதிப்பு எண்களாகும்.)