உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

45

மக்கள் என்பார் உயிருள்ளவர். அவர்தம் கை உயிரற்றால் - செயலற்றால் - தனித்துக் கிடந்தால் - ‘மக்கட் கை' என மாற்றம் பெறும் என்பது இப் பரபரப்பான - அமைந்து எண்ண முடியாத-உலகியலில் வியப் பூட்டுவதில்லையா?

பெண்

மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண், ஆண் எனப் பால் பிரிவுடைமை எவரும் அறிந்ததே. பெண் என்பது பெண்டு என்றும் வழங்கப்பட்டது (420, 421). பெண்டிர் என்பதில் அது விளங்கி நிற்கிறது. பெண்டு என்பதைப் பொண்டு ஆக்கி ஆட்டி சேர்த்துப் 'பொண்டாட்டி' ஆக்கி மொழிக் கேட்டுடன் பண்பாட்டுக் கேடும் ஆக்கிவருதல் குறுந்திரை பெருந்திரைக் கொள்கையாகி விட்ட நிலையில், 'பெண்டு' என்னும் பண்பாட்டுப் பெயர் தலை வணங்க வைக்கிறது.

பெண்டன் கை, பெண்டின் கை என வழங்கப்படுதலை, "வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்

என்றும்,

"பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்”

என்றும் கூறுகிறார் (420,421).

திசை

“தெற்கு வடக்குத் தெரியாதவன்” என்பது பழமொழி. தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு எனக் கோணத் திசைகளை வழங்கு கிறோமே! முழுத்திசையில் சுருங்காத முன் திசையைக் கோணத் திசைக்குக் குறுக்குவது நம் வழக்கா? நம் முந்தைத் தொல்காப்பியர் காட்டும் வழக்கே யாம். அவர்க்கு முன்னரே அவ்வழக்கு இருந்ததை என்மனார் புலவர் என்பதால் தெளிவிக்கிறார் (432).

பன்னிரண்டு

பத்துடன் மூன்று பதின்மூன்று

பத்துடன் ஐந்து பதினைந்து

இவ்வாறுதானே வரும். பத்துடன் இரண்டைப் ‘பன்னிரண்டு என்கிறோமே! எதனால்?

“பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல்

ஒத்த தென்ப இரண்டுவரு காலை

என்கிறார். மேலும்,

(434)