உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இடத்தில் தொண்ணூறும்,தொண்ணூறு என்னும் இடத்தில் தொள்ளாயிர மும் வந்துவிட்டன. இந் நாளிலும் “தொன்னாயிரம் முறை சொன்னேன்' என்னும் பேச்சுமொழி உண்மை, பழமரபை உணர்த்துகின்றது.

நூறுவரை உள்ள எண்கள் உகரத்தில் முடிதல் ஒலி எளிமை, ஒழுங்குறுத்தம் என்பவை கொண்ட மையை உணரின் அவ்வமைப் பாளியரின் ஆழம் புலப்படும்.

ஆயிரம், இலக்கம், கோடி என்பவை வழங்கப்படவில்லையோ எனின் ஆயிரம் வழங்கப்பட்டது. அதனின் மேற்பட்டவை ஐ, அம், பல் என்னும் முடிபு கொண்ட சொற்களாக வழங்கப்பட்டன.

தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலியவை அவை.

ஆயிரம் அடுக்கிய ஆயிரம் என்பவை தாமரை எனவும் வெள்ளம் எனவும் ஆம்பல் எனவும் வழங்கப்பட்டன. திருவள்ளுவர், சங்கத்தார் ஆயோர் நாளிலேயே கோடி, அடுக்கிய கோடி என்பவை இடம் பெற லாயின.

கோடி என்பது கடைசி என்னும் பொருளில் இன்றும் வழங்கப் படுவதே. கடைசி எண் கோடி எனினும், கோடி, கோடியை அடுக்கிய கோடி என்பதும் வழக்கில் இருந்துளது.கோடா கோடி, கோடானு கோடிஎன்பன

அவை.

ஊரறிய ஒளியுடைய செல்வர்கள் இருப்பின், அவர்கள் பெருமை யாகப் பேசப்பட்டனர். ஒளிக் கற்றையால் விளங்கும் கதிரவன் போலக் கருதப்பட்டனர். அதனால் அவர்கள் ‘இலக்கர்’களாகினர். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம் (754). விளங்கிய செல்வம் இலக்கம் ஆயது; எண்ணும் ஆயது.

மக்கட்கை

மக்கள் என்பதனுடன் கை சேர்ந்தால், ‘மக்கள் கை’ என்னும் இடமும் உண்டு; ‘மக்கட் கை' என்னும் இடமும் உண்டு. உயிருடையவர் கை எனின் மக்கள் கை. உயிரற்றவர் கை எனின் மக்கட் கை. இதனைத் தொல்காப்பியர்,

“மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே”

என்று கூறுகிறார் (405).