உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

43

எழுது, எழும்பு, எழுப்பு, எழூஉ, எழுச்சி என்பனவெல்லாம் எழு என்பதன் வழியாக வந்தவை. எழுத்து என்பதும் அவ்வாறு வந்ததே. எழூஉம் சீப்பும் உடைய அரணத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். அவர் எழுத் தழிவுக்கும் எழுத்துச் சிதைவுக்கும் இடந்தருதல் இன்றி மொழி காத்தல் கட மையாகும்.

மேலும், எழுத்தும் எண்ணும் இணைந்த மொழி தமிழ். எழுத்தே எண்ணாக இருந்தும் அவ்வெண்ணை ஏறத்தாழ மறந்தே போன மக்கள் தமிழ் மக்கள். தமிழெண் மீட்டெடுப்புச் செய்தலைத் தாமே உணரார் எனினும் அண்டை மாநிலங்களை எண்ணினாலும் தமிழர் புரிந்து கொள்ள முடியும்.

க, உ ங, ச,ரு, சா, எ, அ, கூ, க0 என்பவை பழந்தமிழெண்கள். இத் தமிழெண்களின் வழிப்பட்டவையே 1,2,3 என வழங்கப் பெறும் எண்கள். பழந்தமிழர் உலக வணிகத்திற்குப் பயன்படுத்திய பொது எண்கள் இவை.

எண்

எண்கள் எழுத்துகள் என்பவை வேறு வேறாக ல்லாமல், எண்களே எழுத்தாக இருந்தமையால் “எண்ணும் எழுத்தும்” இணைந்தே வழங்கின.

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை

என்றும்,

“எழுத்தறி வித்தவன் இறைவன்

என்றும் வழக்கூன்றின.

இவ்வெண்களைச் சொல்லிப் பாருங்கள்; நூறுவரை சொல்லுங்கள்; எல்லாமும் உகரங்களாக - குற்றியலுகரங்களாக - முடிவதைப்பாருங்கள். ('ஏழு' என்பது முற்றியலுகரம்).

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு. இவற்றுள் ஒரே ஓர் எண் (ஒன்பது) தப்பி வந்தது போல் தோற்றம் தரவில்லையா?

ஒன்பது என்னும் இடத்திலே ‘தொண்டு' என்பதே இருந்தது. அது வழக்கு வீழ்ந்தும் வீழாமலும் இருந்த காலம் தொல்காப்பியர் காலம். அதனால் அவர் ஒன்பது என்பதுடன் தொண்டு என்பதையும் வழங்கி யுள்ளார் (445, 1358). அவ்வாறே பரிபாடலிலும் ஒன்பதும் தொண்டும் வழங்கப்பட்டுள.

தொண்டு வழக்கிழந்து ஒன்பது வந்தமையால் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவையும் கீழே இறங்கிவிட்டன. தொண்பது என்னும்