உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதி

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

55

சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக்கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும்.

மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பனவெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், 'செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது.

விடுக்கப்படுவது, 'ஓலை' என்றாலும் அது 'திருமுகம்' எனப்

பட்டது.

விளக்கை அணை' என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு.

இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு' என்பதாம் இதனைத்,

“தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே"

என்கிறார் (500).

இனச் சுட்டு

ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும்வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கி லும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால்

செந்தாமரை' என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடை னச் சுட்டுடைய பண்பினது. ய பண்பினது. வெண்டாமரை உள்ளதே!

“இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே”

என்பது நூற்பா (501).

இயற்கை செயற்கை

இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு.