உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர்

அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு.

ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

66

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி”

என்கிறார்.

ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர்.

இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க.

செப்பும் வினாவும்

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்" என்பதொரு கிளவியாக்க ÁÝLIT (496).

‘வினா விடை' மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவு தற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு' என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார்.

செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன.

வினாவேவிடை

“படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது,

“வினாவும் செப்பே வினாஎதிர் வரினே’

என்பது (497).