உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

53

பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே.பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்' எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்' என்பதொரு பெயரும் உண்டாயிற்று.

திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர் திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும்

கொண்டனர்.

திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக் காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம்.

ஆண்பால் சொல் அடையாளம் என்ன?

பெண்பால் சொல் அடையாளம் என்ன?

"னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்"

66

“ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்

என்கிறார் தொல்காப்பியர் (488,489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார்.

நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை.

அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது.

வந்த+அவன் = வந்தவன்;

எனத் தேய்தல் இல்லையா?

மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை முறை இன்னதாம்.

பால் திரிபு

அரவானி' என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது.