உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

75

பொருட்கடன் வேண்ட ன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார்.

ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம்.

இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றி னர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர்.

மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப்பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக் கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் 'இருந்த மொழி' என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும்.

“தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்?

உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப்