உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்து களை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங் களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டு கிறார் (886).

பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் 'பொருள்கோள்' எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887).

இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன.

ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும்.

ஈ, தா, கொடு

‘ஈ' என்றோ ‘தா' என்றோ 'கொடு' என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர்.

காடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ' என்று கூறுவான்.

இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா' என்று

கூறுவான்.

கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு' என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார்.

இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம்.

வாராதனவும் பேசாதனவும்

L

இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு.