உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பின்னர் உயிர்களை ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகப் பகுத்துரைத்து, ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் கூறி,

"பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே"

என முடிபும் கூறுகிறார் (1568).

து காறும் நூற்பா இடமாற்றச் சிக்கல் ஏற்பட்டமையன்றி, இடைச் செருகல் ஏற்படவில்லை.

இது கூறுவேம்' என்று தொடங்கி,

இது கூறினேம்' என முடித்தபின்,

அந்தணர், அரசர்,வைசியன், வேளாண் மாந்தர் என்பார் இயல்புகள் பற்றி (1570 1584) பதினைந்து நூற்பாக்கள் வந்து, ஓரறிவுயிரிகளின் சில சிறப்பியல்களைக் (1585-1588) கூறி,

“இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

யப

என இயல் நிறைவாகக் காட்டிய பின்னரும் நூல்வகை, சூத்திரம், உரை, நூற்சிதைவுகள், நூல் உத்திகள் என்பவை (1590-1610) இட ம் பெற்று நூல் நிறைகின்றது.

ஓரறிவு உயிரிபற்றிக் கூறிய இடத்தொடு (1526) தொடர்புடைய அகக் காழ்,புறக்காழ், தோடு மடல் இலை முறி காய்பழம் என்பவை நெட்டிடை தள்ளப்பட்டுக் (1585) கூறப்படுதலும், இடையே “நூலே கரகம்” முதலாக மரபொடு பொருந்தாப் பொருள் இடம்பெறலும் சேர்ப்பு என்பதை விளக்க வேண்டுவது இல்லை.

மரபு இயற்கை தழுவியது; இளமை, ஆண்மை பெண்மை எனக் கூறப்பட்டது. நூலும் கரகமும் குடையும் கொடியும் ஏரும் பிறவும் பிறப்பொடு தொடர்புடையவையா? இயற்கைத் தொடர்பு உடை யவையா? ‘கவச குண்டலத் தொடு பிறத்தல் கதைக்க உதவும்' நடைக்கு ஆகுமா?

மரபியலில் உரையாசிரியர்கள் காலத்திற்கு முன்னரே, பல்வேறு திணிப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள சய்யப்பட்டுள என்பதை அறிந்து கொள்ளல் இப்பகுதிக்குச் சாலும்.