உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகார வாழ்வியல் விளக்கம்

தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பி யத்தைப் பெற்றபேறு ஆகும். ஏனெனில், தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கிய இலக்கணக் கலைவள மெய்யியல் நூல்கள் பலப்பல இருந்தன எனினும் அவற்றைக் காணற்கியலாக் காலநிலையில் அவற்றின் முழுமை யான எச்சமாக நமக்குக் கிடைத்தது தொல்காப்பியமே ஆதலால்! இப் பேற்றினுள்ளும் தனிப்பெரும் பேறு, தொல்காப்பியப் பொருளதிகாரம் பெற்ற பேறு. மூவதிகாரங்களையுடைய தொல்காப்பியம் எழுத்து சொல் அளவில் பயிலப்பட்டு, பொருள் மறைக்கப்பட்டிருந்த காலமும் உண்டு. பொருளின் சிறப்பு

அக் காலத்தையே, “எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப் பதிகாரமும் வவ்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, 'பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்' என்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே.பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என்று சொல்லா நிற்ப" என்னும் இறையனார் களவியல். அவ்வுரையால் பொருளதிகாரப் பயிற்சி நாட்டில் குன்றியமையும் அதில் வல்லார் இல்லாமையும், பொருளதிகாரம் மறைவுண்டமையும் விளக்கமாம்.

வெளிப்பாடு

இந்நிலையிலிருந்த தொல்காப்பியம், தமிழே வாழ்வாகிய புலமைச் செல்வர்கள் சிலர் தண்ணருளால் ஏட்டுப் படியாகக் காக்கப்பட்டன; அக் காவலுக்கு அரண்போல உரை வல்ல பெருமக்கள் சிலர் உரைகண்டு உயிரூட்டினர்; அதனை அரிதின் முயன்று தேடிப் பெருமக்களில் சிலர் அச்சிட்டு நடமாட விட்டனர். இவ்வாறு வழிவழியாகப் பெற்ற பேறே, நம் வாழ்வியல் களஞ்சியமாம் தொல்காப்பியத்தை நாம் பெற வாய்ப்பாகிய தாம்.

பொருள் வளம்

இலக்கணம் என்பது எழுத்து சொல் அளவில் அமைவதே, இந் நாள்வரை உலகம் கண்டது. ஆனால், தொல் பழ நாளிலேயே வாழ்வியல்