உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

கொட்டுதல், வேக்காட்டை அறிய உதவும்.

தட்டிக் கொட்டுதல் ‘ஆய்வு' நோக்கினது ஆதலால் ஆய்வுப் பொருள் தட்டிக் கொட்டுதலுக்கு வந்தது.

தட்டிமுட்டி:

தட்டுதல்

இடறுதல்.

முட்டுதல் தலைப்படுதல்

‘தக்கிமுக்கி’ என்னும் இணைச் சொல் போல்வது இது.

தட்டுதல் பெரும்பாலும் காலில் தட்டுதலையும் அல்லது கால் தட்டுதலையும்; முட்டுதல் பெரும்பாலும் தலையில் முட்டுதலையும் அல்லது தலை முட்டுதலையும் (குறிக்கும். ‘தட்டிவிழுதல்' என்னும் வழக்கையும், 'முட்டு முட்டு' என்று குழந்தைகளுக்கு முட்டுக் காட்டுதலையும் கருதுக. தட்டுதல்- தடுக்குதலாம். தட்டுத்தடங்கல்:

தட்டு

தடங்கல்

ஒன்றைச் ச் செய்ய முனைவார்க்கு முதற்கண் ஏதேனும் தடையுண்டாகுமானால் அது தட்டு எனப்படும்.

அச்செயலைச் செய்யுங்கால் இடை இடையே ஏற்படும் தடைகள் தடங்கல் எனப்படும்.

சிலர் எடுத்துக் கொண்ட செயல்கள் தொடக்க முதல் டையூறு ஏதுமின்றி

இனிது

முடிவதாய் அமையும். அவர்’தட்டுத் தடங்கல்' இன்றிச் செய்து முடித்ததாக மகிழ்வர்.

'தடையுண்டானால் தடந்தோள் உண்டு' என்பது

புரட்சியுரை.

தட்டுத் தடுமாறி:

தட்டுதல்

ஏதாவது ஒன்று இடறுதல்

தடுமாறுதல் - இடறுதலால் வீழ்தல்.

து 'தட்டித்தடுமாறி' எனவும் வழங்கும்; தட்டுதல் தடையாதலாம். தடுமாற்றம் என்பது கால் தள்ளாடுதல். மிகுமுதியரோ ஒளியிழந்தவரோ நடத்தற்குத் தட்டித்