உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

91

தடுமாறுதல் கண்கூடு. தள்ளாடுதல் 'தள்ளமாடுதல்' எனவும் வழங்கும். ‘தள்ளமாட்டாமல்’ இருக்கிறேன் என்பது இறப்பு வரவில்லையே என்னும் ஏக்கத்தில் வருவது. தக்கிமுக்கி, ‘தட்டிமுட்டி' என்பவை காண்க.

தட்டுதாம்பாளம்:

தட்டு

திருநீறு, சூடன் வைக்கும் சிறுத் தட்டு.

தாம்பாளம் தேங்காய் பழம் வெற்றிலை

பெருந்தட்டு.

6

வைக்கும்

தாம்பாளத்தின் உள்ளே தட்டு அடங்கும். கோயில் வழிபாட்டுக்குத் தாம்பாளம், தட்டு, இரண்டும் கொண்டு செல்வது வழக்கம். அகலம் பெரிது சிறிது என்பது மட்டுமில்லாமல் அமைப்பு முறையிலும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு.

இனித் தாம்பாளத்தைப் பெருந்தட்டு என்பதும் உண்டு. தராசுத் தட்டு, இட்லித் தட்டு, உண்கலத்தட்டு எனப்பிற தட்டுகளும் உள.

தட்டுமுட்டுப் பொருட்கள்):

தட்டு

முட்டு

உண்ணற்கும் மூடுவதற்கும் அமைந்த தட்டம் மூடி போல்வன.

- அடுக்களை அல்லது சமையற்கட்டில் நெருங்கிக் கிடக்கும் பானை சட்டி அண்டா குண்டா முதலிய பொருள்கள்.

தட்டு முட்டுப் பொருள்கள் என்பது கைக்கும் காலுக்கும் தட்டவும் முட்டவும் இருப்பவை. எனினும் எடுக்க வாய்ப்பாக வைத்திருக்கும் பொருள்களாம்.

தட்டு-தட்டுதல்;முட்டு-முட்டுதல்; வினை; 'தட்டு-தட்டம் போல்வன; முட்டு-முட்டி; பெயர்’ தென்னை பணை மரங்களின் பாளைசீவி முட்டி கட்டுதல் வழக்கம். பிச்சை முட்டி' என்றொரு வழக்கும் உண்டு.

தட்டை தாள்:

தட்டை

கரும்பு, சோளம் முதலியவற்றின் அடித்தண்டு.

தாள்

நெல், புல் முதலியவற்றின் அடித்தண்டு.