உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டா தசுக்கா:

இணைச்சொல் அகராதி

தண்டா - வரி வாங்க அல்லது வரிதண்ட வந்தவனா?

தசுக்கா

66

கொழுத்துப் போய் வந்தவனா?

93

நான் அவனிடம் நடந்தது என்ன என்று கேட்டேன். உடனே னே அவன் ‘தண்டா தசுக்கா' என்று குதித்து விட்டான் என்பது வழக்கு.

அரசு வரி தண்டவந்தவன் அடாவடி ஆணை செலுத்து வதையும் தடி தூக்கியவனெல்லாம் தண்டக்காரனா என்பதையும் கருதினால் தண்டா என்பதன் பொருள் விளங்கும். தண்டு என்பது படை; தசுக்கு என்பது கொழுத்த ஊன்.

தத்தித் தாவி:

தத்துதல் – தவளை போல் இடைவெளிபடச் செல்லுதல். தாவுதல்

I

முயல்போல் பெரிதளவு இடைவெளிபட உயர்ந் தோங்கித் தாவுதல்.

தத்துதலும் தாவுதலும் இடைவெளிபடத்

துள்ளிச் செல்லுதல் எனினும் முன்னது நிலத்தினின்று மிக உயராமையும் மிக இடைவெளி படாமையும் உடையது. ‘தத்துதல் தாவுதல், குழந்தையர் விளையாடல்களில் இடம் பெறும், போலிகை ஆட்டங்களில் இவை இடம் பெறும்.

தப்புத் தண்டா:

தப்பு

தண்டா

66

கொண்டொழுகத் தக்க கடைப் பிடியைக் கொண்டொழுகாது தப்புதல்.

தண்டனைக் குரிய குற்றத்தில் மாட்டிக் கொள்ளுதல்.

தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாதே; தப்புத் தண்டாச் செய்து மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகள்.

'தப்பும் தவறும்' என்பதில் தப்பு என்பதன் விளக்கம் அறிக. தண்டா-தண்டத்திற்கு உரியது தண்டம். அது தண்டா என நின்றது. தண்டா என்பது தவிர்க்கத் தக்கவையுமாம். முதுமொழிக் காஞ்சியில் வரும் தண்டாப் பத்து இப்பொருளது.