112
நிலம் நீச்சு நிலம்
நீச்சு
—
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
நன்செய் நீர்வாய்ப்பு.
‘நிலம் நீச்சு உண்டா?' என்பது உழவரைப் பற்றிய ஒரு வினா. நிலம் நன்செய் ஆதல் ‘நிலபுலம்' என்பதில் காண்க. நீச்சு என்பது கிணறு, குளம், கால் முதலிய வாய்ப்புகளைக் குறிக்கும். “நீரருகே சேர்ந்த நிலம்’ என்பதே நிலத்தின் மதிப்பாம். நீர் வளமில்லா நிலம், நிலம் எனப்படாமல் புலமாகப் போய்விடும். நீக்குப் போக்கு
நீக்கு போக்கு
- மறக்க வேண்டுவனவற்றை மறத்தல்.
ஒதுக்க வேண்டுவனவற்றை ஒதுக்குதல்
ரே கெடுபிடியாக இருந்தால் முடியுமா வாழ்க்கையில் நீக்குப் போக்கு கட்டாயம் வேண்டும் என்று பட்டறிவாளர் அறிவுரை கூறுவர். “ மறத்தல் இறப்பினை (சிறப்பு) என்றும்” என்பார் வள்ளுவர். “தூற்றாதே தூர விடல்” என்பது நாலடி. இவை நீக்குப் போக்குகளைச் சுட்டுவன.
நீட்டக் குறைக்க
நீட்ட
_
கொடுக்க
குறைக்க - மறுக்க
கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டு அதற்குப் பின்பு கொடுக்க மறுத்தால் வெறுப்பைக் கட்டிக் கொள்ள நேர்தல் உண்டு. "நீட்டக் குறைக்க நெடும்பகை” என்பது பழமொழி. நீட்டுதல் கொடுத் தற்குக் கையை நீட்டுதல். கொடுக்காதவனை ‘நீட்ட மாட்டானே' எனப் பழிப்பர். தருகை நீண்ட தயரதன் என்றார் கம்பர். குறைத்தல் சுருக்குதலும் இல்லையெனலும் தழுவியது. நெல்லும் புல்லும்
நெல்
புல்
- நெல் தவசம்
புல் தவசம்(கம்பு)
நெல்-நன்செய்ப்பயிர், புல்- புன்செய்ப் பயிர். முன்னது பண்பட்ட நிலத்தில் பண்படுத்தச் சிறப்பில் பயன் தருவது.