இணைச்சொல் அகராதி
113
பின்னது கரிசல் மண்ணில் இயல்பாகப் பெய்யும் மழையில் எளிதாய் முளைத்து நல்வளம் தருவது.
புல்லரிசி என்பதொன்றுண்டு. அது நெல்லொடு கூடியதன்று. அஃது எறும்பு சேர்த்து வைக்கும் புல். மலைநெல், வெதிர்நெல் என்னும் மூங்கில் நெல். ஐவனம் என்பது இலக்கியச் சொல்.
நெளிவு சுழிவு
நெளிவு
சுழிவு
ஒரு பொருள் நெளிந்துவிடுதல் அல்லது வளைந்து விடுதல்.
நெளிந்த பொருள் மேலும் நெளிதல்.
நெளிவினும் சழிவு சீர்கேடு மிக்கதாம். நெளி வெடுக்க ‘ஈயம் பூசுவார்’ கருவியுடன் வருவர். அது சழிவு ஆகுமானால் எவ்வளவு தட்டிக் கொட்டிப் பார்த்தாலும் சழிவு அடையாளம் இருக்கவே செய்யும்.
நெளிவு, எவராவது திமிராகப் பேசினால், “உன் நெளிசலை எடுக்க வேண்டுமா?” என்னும் அளவுக்கு விரிந்தது.
நெளிவு சுழிவு’க்கும் நெளிவு உதவியுள்ளது. 'நெளிவு என்பது விரலணிகளுள் ஒன்றுமாம்.
நெற்று நெருகு
நெற்று
நெருகு
காய்ந்துபோன தேங்காய் நெற்று, பயற்று நெற்று போல்வன.
பருப்பு வைக்காமல் காய்ந்து சுருங்கிப்போன குலையும் போல்வன.
நெற்றில் உள்ளீடு நன்றாக அமைந்திருக்கும். நெருகில் உள்ளீடு இராது. இருப்பினும் பயன் செய்யாது.
பருத்திச் செடியில் காய்கள் முற்றிப் பயன் தராமல் நெருகாகிப் போதல் ஒரு நோயாம். தோல் நெருக்கி உள்ளீடு இல்லாமல் செய்தமையால் நெருகுப் பெயர் பெற்றிருக்கலாம்.
நேரம் காலம்
நேரம்
காலம்
ஒன்றைச் செய்தற்கு நேர்வாக அமைந்த பொழுது.
ஒன்றைச் செய்தற்கு எடுத்துக் கொள்ளும் கால