114
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
நிலை.
எந்தச் செயலையும் காலநிலை அறிந்து மேற்கொள்ளலும் வேண்டும், கால நிலையுடன் அதனை நிறைவேற்றுதற்குரிய நேரத்தையும் போற்றிச் செய்தலும் வேண்டும். 'காலமறிந்து செயல்' எனனும் திருக்குறள் சொகினம் (சகுனம்) ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்த்துச் செய்வதைக் குறிப்பதன்றாம். அவ்வகையில் நேரமும் காலமும் கொள்க. ஒரு செயல் நிறைவேறத்தக்க பொழுது நிறைவேற இயலாத பொழுதென உண்டேயன்றிப் பொழுதில் நல்பொழுது அல்பொழுது இல்லையாம். நேரும் கூறும்
நேர்
கூறு
நெடுக்கம் அல்லது நீளம்
குறுக்கம் அல்லது அகலம்
ஒன்றை நேரும் கூறுமாக அறுப்பதும், நேரும் கூறுமாகக் கிழிப்பதும், பின்னர் இணைப்பதும் தொழில் முறையாம். இந்நேரும் கூறும், நெடுக்காகவும் குறுக்காகவும் நடப்பதற்கும் சுட்டப்படும். கூறு என்பது பகுப்பதாம். கூறுவைத்தல், கூற்றம் என்பவை பகுப்பின் பொருளன.
நொண்டி சண்டி
நொண்டி
சண்டி
காலில் குறையுடைய மாடு.
உழைக்காமல் இடக்கும் செய்யும் மாடு.
66
நொண்டி நடக்கும் மாடு நொண்டியாம். நொண்டி யடித்தல் என்னும் விளையாட்டு நாடறிந்தது. நொண்டி நொடம் காண்க. சண்டியை மாதம்போம் காதவழி” என்பதும், “தின்னுமாம் ஒருபடப்பு திரும்பாதாம் ஒரு மடக்கு” என்பதும் விளக்கும்.
66
நொண்டி நொடம்
நொண்டி நொடம்
—
கால் குறையால் நொண்டி நடப்பவர்
கை முடங்கிப் போனவர்
நொண்டியடித்தல் ஒரு விளையாட்டு, முள்ளோ கல்லோ இடித்தால் நொண்டி நடப்பது உண்டு. ஆனால் இந்நொண்டுதல் இயற்கையாகி விட்ட நிலை.
நொடம், நுடம், முடம் என்பன ஒரு பொருளன.