136
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
மொய்த்தல் எறும்பு மொய்த்தல், ஈமொய்த்தல் போலக் கூட்டம். முறை-நேர்மை, அறமுறை. ஒருவனைப் பலர் தாக்குதல் முறையன்று என்பதாம்.
மோழை காளை
மோழை
காளை
—
கொம்பு இல்லாதது
கொம்பு உடையது.
'மோழையும் காளையும்
கடாக்களே.' இருப்பினும்
மோழைக்குக் கொம்பு இல்லை. காளைக்குத் கொம்பு உண்டு. “ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்” என்பதொரு பழமொழி. கொம்பு இல்லாததும் குத்த வருமாம்; ஏழையைப் பார்த்து அவ்வளவு எளிமைப்பட்ட செயலாம்.
66
‘மூத்தது மோழை இளையது காளை” என்னும் பழமொழி.. மூத்தவனிலும் இளையவன் எடுப்பை வெளிப்படுத்தும்.
வக்கு வகை
வக்கு
வகை
―
―
வழி; வாய்ப்பு,
- பிறர் உதவியாம் வகை.
‘வக்கு வகை' என்பது ‘வழி வகை’ எனவும் படும். தம் பொருளால் வாழ்வு நடத்துதலும் பிறர் உதவியால் வாழ்வு நடத்துதலும் என இருவகை வாழ்வும் உண்டு. ஒருவர்க்கே ஒவ்வொரு காலத்தில் இவ்விருவகை வாழ்வும் இணைதலும் உண்டு. இவ்விரண்டு வகையாலும் நிரம்பாத வறிய வாழ்வு உடையவரை ‘வக்குவகை இல்லாதவர்’ என இகழ்வது வழக்கம். வக்கற்றவன், வகையற்றவன் என்பவை வக்கு வகைகளின் விரியாம். வகை தொகை
வகை
தொகை
வரவு வந்த அல்லது செலவிட்ட வழி.
ப
வரவு வந்த அல்லது செலவிட்ட தொகை.
வகை, தொகை விளக்கமாக இருக்கவேண்டும் என்பதை எவரும் விரும்புவது இயற்கை. கணக்கு எழுதும் அன்று இன்னது எனத் தெளிவாக இருக்கும். ஆனால் ஆண்டுகள் சில கடந்தபின்