இணைச்சொல் அகராதி
137
நினைவில் இருக்குமோ? கணக்கு வகை, தொகை செம்மையாக இருந்தால் என்றும் கண்டு கொள்ளலாமே. செய்வன திருந்த செய்ய விழைவார் வகை, தொகை சீராக வைத்திருப்பார்.
வட்டம் வளசல்
வட்டம்
வளசல்
தன் சுற்றத்தார் வீடுகள்.
- தன் உறவினர் வீடுகள்.
முற்காலத்தில் பங்காளிகள் ஒரு வட்டமாகவும் அவர்கள் காலத்தில் உறவினர்கள் அடுத்தடுத்து வட்டம் வட்டமாக அமைந்திருக்க வாய்த்தது. ஆதலால் தம்மை அடுத்தாரை வட்ட மாகவும், அவரை அடுத்திருப்பாரை வளசல் ஆகவும் கருதினர். நகர வாழ்க்கையில் வட்டம் வளசல்களுக்கு இடமில்லையாம். வட்டம் - வட்டகை எனவும் வளசல் - வளைவு எனவும் வழங்கும்.
-
வட்டி வாசி
வட்டி
வாசி
-
வ
குறித்த தொகையைக் குறித்த காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈடாகத் தரும் தொகை வட்டி.
வட்டித் தொகை அதற்குரிய கெடுவைத் தாண்டிக் கொடுக்கப்படுமானால் அத்தொகைக்குரிய வட்டித் தொகை வாசி.
‘வாசி' என்பது வட்டிக்கு வட்டியாம். கூட்டு வட்டியும் வாசியே. வட்டி பாவத் தொழிலாகக் கருதப்பட்ட காலநிலை யுண்டு. இன்று நாடே வட்டிக்கு வட்டி எனத் தவிக்கிறது. ஒவ்வொரு வரும் நாட்டின் கடனாளிகளே! வட்டி தருவோரே! வத்தல் வதக்கல்
வத்தல்(வற்றல்)- வற்றி உலர்ந்து போனது வத்தல். (வற்றல்)
வதக்கல்
―
- சற்றே வற்றி சற்றே ஈரப்பதம் உடையது வதக்கல். உலரப் போட்ட மிளகாய் வற்றல் நன்றாக உலர்ந்தும் உலரமாலும் இருந்தால் ' வத்தலும் வதக்கலுமாக' இருக்கின்றதென்பர்.
நீர்ப்பதன் முழுவதும் போக்காமல் ஓரளவு போக்குதலை ‘வதக்குதல்' என்பது வழக்கம். ஈர உள்ளி அல்லது ஈர வெண்காயம்