இணைச்சொல் அகராதி
149
முண்டும் முடிச்சுமாக இருக்கும் இந்த மரத்தை அறுக்க முடியாது. அரம்பத்தையும், உளியையும் சிதைத்துவிடும் என்பர். கதவு, நிலை முதலிய பொருள் செய்தற்கு மரம் எடுப்பவர் முண்டு முடிச்சு இல்லாமல் பார்ப்பர்.
துண்டு துணி
நெடிய பாவில் இருந்து துண்டு போடுவது-துண்டு துண்டாக அறுத்து அமைப்பது துண்டு; அத்துண்டையும் சிறிது சிறிதாக அறுத்து ஆக்குவது துணி. துணியிலும் சிறியது துணுக்கு. துண்டு துணுக்கு என்பதும் உண்டு. துணி, துணிப்பதால் (துண்டாக்கு தலால்) பெற்ற பெயர். அத்துணித்துண்டு போலவே ஒரு கூட்டத்தில் இருந்து பிரிந்து அவர் செய்தற்கு அரிய செயலை செய்வாரே ஆனால், அவர் 'துணிவானர்' எனப்படுவார். கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) செயலாற்றியமையால் துணிவு. துணிவாளர் என்பவை உண்டாயின. “எண்ணித்துணிக கருமம்-" வள்ளுவம் துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பது பழமொழி.
தோலும் வாலும்
Ꮒ
தோல் என்பதும் வால் என்பதும் உழவர் பயன்படுத்தும் நீர் இறைப்பு பெட்டியொரு இணைந்துள்ள கருவிகள். இரும்பால்- தகட்டால்-செய்யப்பட்ட சால் அல்லது கூனையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய தோல் பை தோல் ஆகும். சாலில் நீர் நிரப்பி கிணற்றில் மேலே கொண்டு வந்து தோல்பை வழியாக நீரை வாய்க்காலில் வடிப்பர். அத்தோலில் இருந்து செல்லும் கயிறு வால். அது வால் கயிறு எனப்படும். வடத்தொடு சேர்த்துக் கட்டப்படும். வடம் வால் இரண்டும் சாலை மேலும் கீழும் பற்றி மேலிழுத்தும் கீழிறக்கியும் கிணற்று நீரை முகந்து வரும். முகவைப்பாட்டு பழமையானது. இறவை என்பது நீர் இறைக்கும் தொழில் பற்றியது. “இறவைக்குப் போகிறது மாடு” இறைக்கப் போகிறார் என்பது வழக்கு.
தில்லுமுல்லு
தில்லு
முல்லு
வலிமை உடல் வலிமை கொழுப்பெடுத்த தன்மை தேவையில்லாமல் முட்டி மோதல்
“உனக்கு தில்லு இருந்தால் வந்து மோதிப்பார்" என்பதில் 'தில்' என்பதற்கு வலிமைப் பொருள் உள்ளமை புலப்படும்.