உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

153

படுத்ததலாம். இரண்டும் புடைத்தல் வழிப்பட்டவையே. நாவுதல், நீவுதல் என்பவும் அவ்வகையவே.

துடைத்து மெழுகல்

துடைப்பதற்கு உரிய கருவி துடைப்பம்; துடைக்குமாறு; விளக்குமாறு, கூட்டுமாறு, வாரியல் முதலியனவும் அது.

குப்பை கூளம் தும்பு தூசி ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கி வாரிக் கொட்டிய பின்னர்ச் செய்யவேண்டிய பணி மெழுகுத லாகும்.

மண்தளமாக இருந்த காலத்தில் சாணக நீர் கொண்டு மெழுகும் வழக்கம் இருந்தது. செங்கல் கல், ஆயதளம், ஏற்பட்ட பின் தண்ணீர் தெளித்துத் துடைத்தல் ஆயிற்று. இதுகால் பளிக்குத் தளத்தில் பளிச்சிடும் வகையில் துடைத்து எடுக்கக் கருவிகள் உண்டாகிவிட்டன.

வெள்ளி செவ்வாய் ஒவ்வொருவர் வீட்டையும் மெழுகுதல் தமிழக வழக்கு.

தூக்கி நிறுத்தல்:

ஒன்றை ஓரிடத்து நிலைபெற நிறுத்த வேண்டும் என்றால் தூக்குதல் முதற்பணி. அதற்குரிய இடத்தில் உரிய வகையில் நிறுத்திக் கிட்டித்தல் அடுத்த பணி. இவ்விரு பணிகளும் இணைவானவை; இவற்றை விளக்குவது தூக்கி நிறுத்துதல் என்பது. ‘தொழுது எழுவாள்' என்பது எப்படித் தொழுதலும் எழுதலும் தடை யீடு அற்ற ஒன்றெனத் தோற்றம் தருவதோ அவ்வாறு 'தூக்கி நிறுத்துதலும்' ஒருங்கே நிகழ வேண்டும் என்பதே இதன் குறிப்பாம். டையீடுபடின், இரட்டை வேலையாய், ஏற்பட்டுவிடும்.

தோட்டி தொண்டைமான்

தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பதால் தோட்டி வைத்திருப்பவன் ‘தோட்டி’ எனப்பட்டான். இடையர்கள் இலை, தழை, கொய்ய வைத்திருப்பதும் தோட்டியே; அது தொரட்டி எனவும், வாங்கு (வளைவு) எனவும் வழங்குகிறது.